/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
மகனை காப்பாற்ற முயன்ற தந்தை ஆற்றில் மூழ்கி பலி
/
மகனை காப்பாற்ற முயன்ற தந்தை ஆற்றில் மூழ்கி பலி
ADDED : நவ 10, 2025 11:30 PM

அரக்கோணம்: நீச்சல் பழகிய போது, ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மகனை காப்பாற்ற முயன்ற தந்தை நீரில் மூழ்கி இறந்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த வளர்புரத்தை சேர்ந்தவர் ரமேஷ், 45; சென்னை பெரம்பூர் அரசு மருத்துவமனை லேப் டெக்னீஷியன். இவரது மனைவி பரிமளா. தம்பதிக்கு மோதிப் ராஜ், 10, பிரதீப் ராஜ், 7, என, இரு மகன்கள் உள்ளனர்.
நேற்று முன்தினம் பாளையார் கண்டிகையில் உள்ள மாமியார் வீட்டுக்கு, ரமேஷ் குடும்பத்துடன் வந்தார். அப்போது, அருகில் உள்ள கல்லாறு ஆற்றுக்கு, அனைவரும் சென்றனர். மோதிப் ராஜுக்கு, ரமேஷ் நீச்சல் பயிற்சி அளித்த போது, ஆற்றில் நீரோட்டம் அதிகரித்து, மோதிப் ராஜ் அடித்துச் செல்லப்பட்டார். இதைப்பார்த்த ரமேஷ் மகனை காப்பாற்ற முயன்ற போது, நீரில் மூழ்கினார்.
கரையில் நின்ற பரிமளா கூச்சலிட்டதும், அங்கிருந்தவர்கள் மோதிப் ராஜை மீட்டனர். ரமேஷை அரக்கோணம் தீயணைப்பு வீரர்கள், நேற்று காலை, சடலமாக மீட்டனர். தக்கோலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

