/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
காதலியை கொன்ற பைனான்சியர் சரண்
/
காதலியை கொன்ற பைனான்சியர் சரண்
ADDED : மே 14, 2025 01:57 AM
ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா இலங்கை தமிழர் குடியிருப்பைச் சேர்ந்த சங்கர் பாஷா மனைவி சாந்தினி, 42. இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். கருத்து வேறுபாடால் எட்டு ஆண்டுகளுக்கு முன் சாந்தினி கணவரை பிரிந்தார்.
அணைக்கட்டு பகுதி ஹோட்டலில் பணியாற்றியபோது, அங்கு சாப்பிட வந்த பைனான்சியர் காமேஷ், 43, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஏழு ஆண்டுகளாக, வாடகை வீட்டில் தனிக்குடித்தனம் நடத்தினர்.
காமேஷ், வேறொரு பெண்ணை திருமணம் செய்ய ஏற்பாடு செய்தார். இதில், சாந்தினிக்கும், காமேஷுக்கும் தகராறு ஏற்பட்டது. சாந்தினி தன் பிள்ளைகளுக்கு திருமணம் செய்ய, காமேஷிடம் பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்தார். ஆத்திரமடைந்த காமேஷ், நேற்று காலை சாந்தினியை, வெட்டிக் கொலை செய்துவிட்டு, வாலாஜா போலீசில் சரணடைந்தார். போலீசார் காமேஷை கைது செய்து விசாரிக்கின்றனர்.