/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
57 ஆண்டுக்கு பின் கும்பாபிஷேகம் சோளிங்கரில் பள்ளிகளுக்கு 'லீவு'
/
57 ஆண்டுக்கு பின் கும்பாபிஷேகம் சோளிங்கரில் பள்ளிகளுக்கு 'லீவு'
57 ஆண்டுக்கு பின் கும்பாபிஷேகம் சோளிங்கரில் பள்ளிகளுக்கு 'லீவு'
57 ஆண்டுக்கு பின் கும்பாபிஷேகம் சோளிங்கரில் பள்ளிகளுக்கு 'லீவு'
ADDED : ஜூலை 05, 2025 11:18 PM

சோளிங்கர்:ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கொண்டபாளையத்தில் யோக நரசிம்ம சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு எதிரே உள்ள சின்ன மலையில், யோக அனுமன் அருள்பாலித்து வருகிறார்.
யோக நரசிம்மரை வழிபடும் பக்தர்களின் வேண்டுதலை, யோக அனுமன் நிறைவேற்றுவதாக ஐதீகம். சிறிய மலையில் அருள்பாலிக்கும் யோக அனுமன் கோவில் புனரமைப்பு பணிகள், மூன்று ஆண்டுகளாக நடந்து வந்தன.
தற்போது, பணி நிறைவடைந்துள்ள நிலையில், நாளை காலை 9:00 மணிக்கு, கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. இதற்கான யாகசாலை பூஜை நேற்று முன்தினம் துவங்கியது. 57 ஆண்டுகளுக்கு பின், தற்போது தான் இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
இதையொட்டி, சோளிங்கர் வட்டத்திற்கு உட்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக, வரும் 19ம் தேதி வேலை நாளாக பள்ளிகள் செயல்படும். இதற்கான அறிவிப்பை, ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் சந்திரகலா வெளியிட்டுள்ளார்.