/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
சோளிங்கரில் இன்று துவங்கும் மணவாள மாமுனி உற்சவம்
/
சோளிங்கரில் இன்று துவங்கும் மணவாள மாமுனி உற்சவம்
ADDED : அக் 27, 2024 01:26 AM

சோளிங்கர்:ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கொண்டபாளையத்தில் அமைந்துள்ளது யோக நரசிம்ம சுவாமி மலைக்கோவில். 108 திவ்யதேசங்களில் ஒன்றான இந்த தலத்திற்கு, ஏராளமான பக்தர்கள் தினசரி வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
பிரம்ம தீர்த்தம் என்படும் தக்கான் குளம், மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. உற்சவ மூர்த்தியான பக்தோசித பெருமாள், சோளிங்கர் நகரில் அருள்பாலித்து வருகிறார். யோக நிலையில் உள்ள நரசிம்ம சுவாமி, கார்த்திகை மாதத்தில் கண் திறந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் என்பது ஐதீகம். இதனால், கார்த்திகை மாதத்தில் மலைக்கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஐப்பசி மாதம், அவதரித்த மணவாள மாமுனிகளின் உற்சவம், பக்தோசித பெருமாள் கோவிலில் இன்று 27 ம் தேதி துவங்குகிறது. வரும் 5ம் தேதி வரை தொடர்ந்து இந்த உற்சவம் நடைபெற உள்ளது.
மேலும், வரும் 31ம் தேதி தீபாவளியை ஒட்டி பக்தோசித பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது என அறநிலைய துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.