/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
மாசி தெப்ப உற்சவம் சோளிங்கரில் கோலாகலம்
/
மாசி தெப்ப உற்சவம் சோளிங்கரில் கோலாகலம்
ADDED : பிப் 25, 2024 02:28 AM

சோளிங்கர்,:ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கொண்டபாளையத்தில் யோக நரசிம்ம சுவாமி மலைக்கோவிலில் அருள்பாலித்து வருகிறார். யோக நரசிம்மரின் உற்சவ மூர்த்தியான பக்தோசித பெருமாளுக்கு, மாசி மகம் தெப்பல் திருவிழா நடைபெறும்.
இதையொட்டி, நேற்று மாலை பிரம்ம தீர்த்தம் என அழைக்கப்படும் தக்கான் குளத்தில், தெப்பலில் யோக நரசிம்மரின் உற்சவ மூர்த்தியான பக்தோசித பெருமாள் எழுந்தருளினார். திரளான பக்தர்கள், தெப்பலை வடம் பிடித்து இழுத்தனர். முன்னதாக, குளக்கரையில் உள்ள திருமஞ்சன மண்டபத்தில், பக்தோசித பெருமாளுக்கு சிறப்பு அலங்காரமும், தீபாராதனையும் நடந்தது.
முதல் நாளான நேற்று மூன்று முறை தெப்பலில் வலம் வந்தார். இன்றும், நாளையும் தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது. உற்சவத்தை ஒட்டி, சோளிங்கர் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.