/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்த அமைச்சர் 'ஷாக்'
/
ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்த அமைச்சர் 'ஷாக்'
ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்த அமைச்சர் 'ஷாக்'
ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்த அமைச்சர் 'ஷாக்'
ADDED : ஜூன் 26, 2025 02:30 AM
ராணிப்பேட்டை:மேல்விஷாரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் யாரும் பணியில் இல்லாததால் அதிர்ச்சியடைந்த சுகாதாரத்துறை அமைச்சர், பணியில் இல்லாதவர்களை 'சஸ்பெண்ட்' செய்ய உத்தரவிட்டார்.
ராணிப்பேட்டை மாவட்டம், மேல்விஷாரம் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில், 5 டாக்டர்கள், 4 நர்ஸ்கள், 6 ஊழியர்கள் என, 15 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.
நேற்று காலை, 8:00 மணிக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், நடைபயிற்சி முடித்து திடீரென இங்கு ஆய்வுக்கு சென்றார். அங்கு ஒரு ஊழியர் கூட இல்லாத நிலையில், ஆரம்ப சுகாதார நிலைய கேட் மூடப்பட்டிருந்தது.
நுழைவாயிலில், ஒரு கர்ப்பிணி உட்பட நான்கு நோயாளிகள் காத்திருந்தனர். அங்கிருந்த நோயாளிகளிடம் விசாரித்தபோது, நோயாளிகள் காத்திருப்பு அறை கூட திறக்காத நிலையில், அங்கு மின்விசிறி, இருக்கை, குடிநீர் என, எதுவும் இல்லை என, குற்றஞ்சாட்டினர்.
கேட்டை திறந்து உள்ளே சென்ற அமைச்சர், அனைத்து அறைகளையும் ஆய்வு செய்தார். யாரும் இல்லாத நிலையில், காலை, 8:15 மணிக்கு, அபிராமி என்ற நர்ஸ் பணிக்கு வந்தார். அவரிடம் டியூட்டி டாக்டர், நர்ஸ், பணியாளர்கள் யார், என விசாரித்தார். அவர் பணியாளர் குறித்த ஆவணங்களை அவரிடம் காண்பித்தார்.
சென்னை பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநரை, மொபைல் போனில் தொடர்புகொண்டு, இங்கு பணியில் இருக்க வேண்டிய டாக்டர்கள், நர்ஸ்கள், பணியாளர்கள் யாரென விசாரித்து, 'சஸ்பெண்ட்' செய்ய ராணிப்பேட்டை வட்டார மருத்துவ அலுவலருக்கு உத்தரவிடுமாறு கூறினார்.