/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
வீட்டில் பிரசவம் பார்த்ததில் தாயும், குழந்தையும் பலி
/
வீட்டில் பிரசவம் பார்த்ததில் தாயும், குழந்தையும் பலி
வீட்டில் பிரசவம் பார்த்ததில் தாயும், குழந்தையும் பலி
வீட்டில் பிரசவம் பார்த்ததில் தாயும், குழந்தையும் பலி
ADDED : ஜன 16, 2025 11:50 PM
ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடை சேர்ந்தவர் ஜோதி, 31. இவரது கணவர் சேலத்தை சேர்ந்த தமிழ்செல்வன், 37. தம்பதிக்கு, 3 குழந்தைகள் உள்ள நிலையில், ஜோதி, 4வதாக கர்ப்பமானார்.
நிறைமாத கர்ப்பிணியான ஜோதிக்கு தாய் வள்ளி, 65, நேற்று அதிகாலை பிரசவம் பார்த்ததில், குழந்தையும், தாய் ஜோதியும் பலியாகினர்.
இறந்த பச்சிளம் ஆண் குழந்தையை வீட்டில் கைப்பையில் மறைத்து வைத்து விட்டு நாடகமாடினார்.
மகளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்து சென்ற போது, டாக்டர்கள் ஜோதியை பரிசோதனை செய்தனர்.அதில் அவர் பலியானது தெரிந்து, ஆற்காடு போலீசில் தகவல் தெரிவித்தனர்.
போலீசார் வள்ளியிடம் விசாரித்ததில், வீட்டிலேயே பிரசவம் பார்த்தபோது, தாயும், குழந்தையும் இறந்ததை தெரிவித்து அழுதார். அவரை, போலீசார் கைது செய்தனர்.