/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
உளியநல்லுார் ஏரி நீர் கால்வாய் சேதம் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்
/
உளியநல்லுார் ஏரி நீர் கால்வாய் சேதம் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்
உளியநல்லுார் ஏரி நீர் கால்வாய் சேதம் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்
உளியநல்லுார் ஏரி நீர் கால்வாய் சேதம் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்
ADDED : டிச 28, 2025 05:40 AM

மகேந்திரவாடி: உளியநல்லுார் நீர்வரத்து கால்வாய் சேதத்தை மறைக்க, சாலை நடுவே கான்கிரீட் கற்கள் தடுப்பு ஏற்படுத்தி இருப்பதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியத்தில், மகேந்திரவாடி கிராமத்தில், நீர்வளத் துறை கட்டுப்பாட்டில், பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி நீரை பயன்படுத்தி, விவசாயிகள் இரு பருவம் நெல் சாகுபடி செய்து வருகின்றனர்.
இந்த ஏரிக்கரை மீது, நெமிலியில் இருந்து, பாணவாரம் பகுதிக்கு செல்லும் பிரதான சாலை உள்ளது. இந்த சாலை குறுக்கே, மகேந்திரவாடி ஏரி உபரி நீர் வெளியேறி உளியநல்லுார் ஏரிக்கு செல்லும் நீர் வரத்து கால்வாய் செல்கிறது. மழைக்காலத்தில், கால்வாயில் அதிகமாக தண்ணீர் வெளியேறும் போது, போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்படும்.
சமீபத்தில் பெய்த வட கிழக்கு பருவ மழைக்கு மகேந்திரவாடி கலங்கல் தண்ணீர் வெளியேறியதால், சாலை சேதம் ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கிவிடக்கூடாது என, நெடுஞ்சாலை துறையினர் சாலை நடுவே கான்கிரீட் கற்களால் தடுப்பு ஏற்படுத்தி உள்ளனர்.
மழை நின்ற பின், அந்த சேதமடைந்த சாலையை சீரமைக்க நெடுஞ்சாலை துறையினர் முன்வரவில்லை.
இதனால், அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றொரு வாகன ஓட்டிகளுக்கு வழிவிட முடியாமல் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
விபத்துகளை தவிர்க்க, மகேந்திரவாடி ஏரி உபரி நீர் வெளியேறும் உளியநல்லுார் நீர் வரத்து கால்வாய் குறுக்கே, உயர் மட்ட தரைப்பாலம் கட்டித்தர வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை எழுந்துள்ளது.

