ADDED : அக் 01, 2026 12:14 AM
அ நிறம் | அளவு
காட்பாடி: புதுச்சேரி மாநிலம், வில்லியனுாரைச் சேர்ந்தவர் ஜெயஸ்ரீ, 22. செவிலியர். இவரும், அதே பகுதியை சேர்ந்த ரவுடி கலைக்குமார், 26, என்பவரும் காதலித்த நிலையில், வழக்கு ஒன்றில் கலைக்குமார் சிறையில் அடைக்கப்பட்டார்.
அவர், ஜாமினில் வந்த நிலையில், தன்னுடன் பேசுவதை தவிர்த்த ஜெயஸ்ரீயை, செப்., 26ல், கலைக்குமார் வெட்டி கொலை செய்து தப்பினார்.
இந்நிலையில், வேலுார் மாவட்டம், காட்பாடியில் நேற்று ரயில் மோதி, உயிரிழந்து கிடந்த நபர் குறித்து, காட்பாடி ரயில்வே போலீசார் விசாரித்தனர். அதில், உயிரிழந்தது, கலைக்குமார் என, தெரிந்தது.
அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டு, தண்டவாளத்தில் வீசப்பட்டாரா என, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
