/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
மூதாட்டி காதை அறுத்து கம்மல் திருடியவருக்கு 'காப்பு'
/
மூதாட்டி காதை அறுத்து கம்மல் திருடியவருக்கு 'காப்பு'
மூதாட்டி காதை அறுத்து கம்மல் திருடியவருக்கு 'காப்பு'
மூதாட்டி காதை அறுத்து கம்மல் திருடியவருக்கு 'காப்பு'
ADDED : நவ 28, 2025 12:02 AM

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே, நள்ளிரவில் வீடு புகுந்து, மூதாட்டி யின் காதை அறுத்து கம்மலை பறித்து சென்றவரை, சிப்காட் போலீசார் கைது செய்துள்ளனர்.
போலீசில் அவர் அளித்த வாக்குமூலத்தில், அடிக்கடி அந்த பெண் திட்டியதால், மது போதையில் சென்று காதை அறுத்ததாக கூறினார்.
ராணிப்பேட்டை மாவட்டம், அக்ராவரம் மலைமேடு கிராமத்தை சேர்ந்தவர், மறைந்த முருகன். இவரது மனைவி சாலம்மாள், 70. இவர்களுக்கு இரண்டு மகன்கள், மகள் உள்ளனர்.
சாலம்மாள் அதே பகுதியில் உள்ள குடிசை வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
கடந்த 25ம் தேதி நள்ளிரவு 12:00 மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
அப்போது, சாலம்மாள் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர், துாங்கி கொண்டிருந்த மூதாட்டியின் இரண்டு காதுகளையும் கத்தியால் அறுத்து, அவர் அணிந்திருந்த, அரை கிராம் தங்க கம்மலை பறித்து தப்பினார். மேலும், கத்தியால் அந்த மூதாட்டி உடலில் வெட்டி விட்டு தப்பினார்.
படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த மூதாட்டியை குடும்பத்தினர் மீட்டு, வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின், மேல் சிகிச்சைக்காக வேலுார் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இந்நிலையில், மூதாட்டியின் காதை அறுத்து கம்மலை திருடியதாக, அதே பகுதியை சேர்ந்த வினோத் குமார், 39, என்பவரை சிப்காட் போலீசார் கைது செய்தனர்.
வினோத்குமார் போலீசில் அளித்த வாக்கு மூலத்தில், 'போதையில் அலைந்ததால், மூதாட்டி என்னை அடிக்கடி திட்டினார். இதனால் அவர் மீது கடுப்பில் இருந்தேன். எனவே, சம்பவத்தன்று மது போதையில், மூதாட்டியின் காதை அறுத்து, கம்மலை பறித்தேன். பின், போலீசில் சிக்கிக் கொண்டேன்' என தெரிவித்துள்ளார்.

