/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
துாய்மை பணியாளர்களுக்கு இரண்டு மாதமாக சம்பளம் வழங்காததை கண்டித்து போராட்டம்

ADDED : மார் 29, 2025 10:28 PM
அரக்கோணம்:அரக்கோணம் நகராட்சியில், இரண்டு மாதங்களாக துாய்மை பணியாளர்களுக்கு சம்பளம் வழங்காததை கண்டித்து, துாய்மை பணியாளர்கள் துப்புரவு பணியில் ஈடுபடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நகராட்சியில், 36 வார்டுகள் உள்ளன. இவற்றில் ஒப்பந்த அடிப்படையில், 200க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டு மாதங்களாக ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை.
இதுகுறித்து ஒப்பந்ததாரர் லட்சுமிபதி, சுகாதார ஆய்வாளரிடம் கேட்டபோது, 'தொழிலாளர்கள் முறையாக பணி செய்யவில்லை; சம்பளம் வழங்க முடியாது' எனக் கூறி, ஆபாசமாக பேசியுள்ளார்.
இதில், ஆத்திரமடைந்த தொழிலாளர்கள், நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சம்பள தொகையை உடனடியாக வழங்க வேண்டும். ஒப்பந்ததாரரை ஆபாசமாக பேசியதற்கு, சுகாதார ஆய்வாளர் மன்னிப்பு கேட்க வேண்டும் என, வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நகராட்சி கமிஷனர் செந்தில்குமார் தலைமையில், ஒப்பந்ததாரர் லட்சுமிபதி, சுகாதார ஆய்வாளர் சுதாகர் ஆகியோரிடையே பேச்சு நடத்தி, சம்பள பாக்கி தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது. இதனால், நேற்று அரக்கோணம் நகராட்சியில் துாய்மை பணி பாதிக்கப்பட்டது.