/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
'ரோப்கார்' சேவை நான்கு நாட்களுக்கு ரத்து
/
'ரோப்கார்' சேவை நான்கு நாட்களுக்கு ரத்து
ADDED : பிப் 07, 2025 09:58 PM
சோளிங்கர்:ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த, கொண்டபாளையத்தில் அமைந்துள்ளது அமிர்தவல்லி தாயார் உடனுறை யோக நரசிம்ம சுவாமி மலைக்கோவில். இந்த கோவிலின் எதிரே, சின்ன மலையில், யோக அனுமன் அருள்பாலித்து வருகிறார்.
யோக நரசிம்ம சுவாமி அருள்பாலிக்கும் பெரிய மலைக்கு, 1,305 படிகள் கொண்ட மலைப்பாதை அமைந்துள்ளது. நாடு முழுதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள், இந்த தலத்திற்கு வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மலையேறி சுவாமி தரிசனம் செய்ய முடியாத பக்தர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் விதமாக, கடந்த ஆண்டு மார்ச் மாதம், பக்தர்களின் பங்களிப்புடன், இங்கு ரோப்கார் வசதி ஏற்படுத்தப்பட்டது.
நபர் ஒருவருக்கு, 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தினசரி, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த ரோப்கார் வாயிலாக பயணித்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். காலை 9:30 மணி முதல், மாலை 4:00 மணி வரை ரோப்கார் சேவை செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், நாளை முதல், வரும் 12ம் தேதி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, ரோப்கார் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
மலைக்கோவிலுக்கு படி வழியாக பக்தர்கள் வழக்கம் போல சென்று சுவாமி தரிசனம் செய்யலாம் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.