/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
சோளிங்கர் நரசிம்ம சுவாமி கோவில் இடம் மீட்பு
/
சோளிங்கர் நரசிம்ம சுவாமி கோவில் இடம் மீட்பு
ADDED : மே 01, 2025 01:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோளிங்கர்:ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கொண்டபாளையத்தில் அமைந்துள்ளது, நரசிம்ம சுவாமி மலைக்கோவில். 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாக விளங்குகிறது.
இந்நிலையில், கொண்டபாளையம் கிராமத்தில், நரசிம்ம சுவாமி கோவிலுக்கு சொந்தமான, சர்வே எண்: 190 மற்றும் 192க்கு இடையே, 740 சதுர அடி காலி இடம், தனிநபரால் ஆக்கிரமிக்கப்பட்டு கடை மற்றும் வீடு கட்டப்பட்டு இருந்தது.
ஆக்கிரமிப்பில் இருந்த இந்த இடத்தை, சோளிங்கர் நரசிம்ம சுவாமி கோவில் இணை ஆணையர் பா.ராஜா தலைமையிலான அதிகாரிகள் நேற்று மீட்டனர். இதன் மதிப்பு 25 லட்சம் ரூபாய்.