/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
கொசஸ்தலை ஆற்றின் கரையில் கற்கள் பதிக்காததால் மண் அரிப்பு
/
கொசஸ்தலை ஆற்றின் கரையில் கற்கள் பதிக்காததால் மண் அரிப்பு
கொசஸ்தலை ஆற்றின் கரையில் கற்கள் பதிக்காததால் மண் அரிப்பு
கொசஸ்தலை ஆற்றின் கரையில் கற்கள் பதிக்காததால் மண் அரிப்பு
ADDED : நவ 04, 2024 03:46 AM

காஞ்சிபுரம்:ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியம், சேந்தமங்கமலம் கிராமத்தில் இருந்து, நெமிலி பேரூராட்சி வழியாக பானாவாரம் செல்லும் சாலை உள்ளது.
இச்சாலையின் குறுக்கே, 300 மீட்டர் அகலத்திற்கு, கொசஸ்தலை ஆறு கடந்து செல்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு உள்ளது.
இந்த தடுப்பணையின் இருபுறமும், 50 மீட்டர் வெள்ளை நிற கற்கள் பதிக்கப்பட்டு உள்ளன. அதற்கு மேல் கற்கள் பதிக்கவில்லை. இதனால், ஆற்றங்கரையோரம் இருக்கும் வயலில் இருந்து மண் சரிந்து ஆற்றில் விழுந்துள்ளது.
இதை தொடர்ந்து, வடகிழக்கு பருவ மழைக்காலங்களில், இந்த மண் அரிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, கொசஸ்தலை ஆற்றின் இருபுறமும் உள்ள கரையை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.