/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
பட்டா பெயர் மாற்ற லஞ்சம் சர்வேயர் சிக்கினார்
/
பட்டா பெயர் மாற்ற லஞ்சம் சர்வேயர் சிக்கினார்
ADDED : செப் 22, 2025 04:00 AM
ராணிப்பேட்டை: பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய, 37,000 ரூபாய் லஞ்சம் பெற்ற சர்வேயரை போலீசார் கைது செய்தனர்.
ராணிப்பேட்டை அடுத்த அம்மூரை சேர்ந்தவர் கார்த்திகேயன், 53; ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது மனைவி பூங்கொடி. இவரது தந்தை, பூங்கொடி உட்பட நான்கு மகள்களுக்கும் சொத்த பாகப்பிரிவினை செய்துள்ளார்.
சொத்துக்களை நான்கு பேருக்கும் தனித்தனியாக பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய, ஆன்லைனில் கார்த்திகேயன் விண்ணப்பித்தார். நடவடிக்கைக்கு தாமதமானது.
இதனால், வாலாஜா தாலுகா அலுவலக சர்வேயர் சித்ராவை அணுகியபோது, அவர், 37,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
பணம் தர விரும்பாத கார்த்திகேயன், ராணிப்பேட்டை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
போலீசார் அறிவுரையின்படி, நேற்று முன்தினம் மாலை, சித்ராவிடம் அலுவலகத்தில் வைத்து பணத்தை கொடுத்த போது, லஞ்ச ஒழிப்பு போலீசார், கையும் களவுமாக சித்ராவை கைது செய்தனர்.