/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
புறக்காவல் நிலையம் கட்டியாச்சு... போலீசார் பணியமர்த்துவது எப்போது?
/
புறக்காவல் நிலையம் கட்டியாச்சு... போலீசார் பணியமர்த்துவது எப்போது?
புறக்காவல் நிலையம் கட்டியாச்சு... போலீசார் பணியமர்த்துவது எப்போது?
புறக்காவல் நிலையம் கட்டியாச்சு... போலீசார் பணியமர்த்துவது எப்போது?
ADDED : அக் 02, 2024 02:16 AM

தக்கோலம்,:ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தக்கோலம் அமைந்துள்ளது. இங்கிருந்து, திருவாலங்காடு ரயில் நிலையம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் உள்ள நகரிகுப்பத்தில், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் என, இரு மாவட்ட எல்லை உள்ளது.
இச்சாலை வழியாக ஒருநாளைக்கு 30,000க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று வருகின்றனர்.
இப்பகுதியில் கஞ்சா மற்றும் வழிப்பறி என, சட்டவிரோத குற்றவங்கள் நடந்த வண்ணம் உள்ளது. இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து, இரு மாவட்ட எல்லை பகுதியான நகரிகுப்பத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் தக்கோலம் போலீசாரால் செக்போஸ்ட் அமைக்கப்பட்டது.
ஆனால், தற்போது வரை காவல் துறையினர் பணியமர்த்தப்பட்டு சோதனையில் ஈடுபடவில்லை. இதன் காரணமாக, இப்பகுதி வாசிகள் இரவு நேரங்களில் ஒருவித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர்.
மேலும், இப்பகுதியில் ஆறு மாதங்களில் 10க்கும் மேற்பட்ட வழிப்பறி நடந்துள்ளது. இதற்கு பின்னும் போலீசார் சோதனையில் ஈடுபடாதது அதிருப்தி அளிப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, ராணிப்பேட்டை எஸ்.பி., இந்த செக்போஸ்டில் 24 மணி நேரமும் காவலர்களை நியமித்து, மக்கள் பாதுகாப்பாக சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

