/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
இளம்பெண்ணை பலாத்காரம் செய்ததாக மூவரிடம் விசாரணை
/
இளம்பெண்ணை பலாத்காரம் செய்ததாக மூவரிடம் விசாரணை
ADDED : செப் 09, 2025 12:24 AM
ராணிப்பேட்டை; காதலனை சரமாரியாக தாக்கி, காதலி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ராணிப்பேட்டை மாவட்டம், நவ்லாக் கிராமத்தில், அரசுக்கு சொந்தமான வேளாண் துறை தென்னம்பண்ணை உள்ளது. ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ளதால், அங்கு சமூக விரோத செயல் அதிகம் நடக்கிறது. நேற்று முன்தினம் இரவு, 10:00 மணியளவில், காதலர்களான, 24 வயது வாலிபர், 20 வயது இளம்பெண் அங்கு சென்றனர்.
அப்போது, அங்கிருந்த மூன்று வாலிபர்கள், காதலனை சரமாரியாக தாக்கி மயக்கமடைய செய்தனர். பின், இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிய இளம்பெண் அருகே வசிக்கும் மக்களிடம் கூறியுள்ளார். அங்கு, 50க்கும் மேற்பட்டோர் சென்றபோது மூன்று பேரும் தப்பி ஓடினர். மயங்கி கிடந்த காதலன், பாதிக்கப்பட்ட பெண் வேலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ராணிப்பேட்டை மகளிர் போலீசார் விசாரித்தனர். சந்தேகத்தில், அவரக்கரை கிராமத்தை சேர்ந்த ராஜா, 24, சிவராஜ், 23, பார்த்திபன், 23, ஆகிய மூவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.