/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
மலையடி - ரயிலடி தடத்தில் பேருந்து இயக்கப்படுமா?
/
மலையடி - ரயிலடி தடத்தில் பேருந்து இயக்கப்படுமா?
ADDED : ஜூன் 21, 2025 06:55 PM
சோளிங்கர்:சோளிங்கர் மலையடிவாரத்தில் இருந்து ரயில் நிலையம் வரை, நகர பேருந்து சேவையை துவக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கொண்டபாளையத்தில் யோக நரசிம்ம சுவாமி மலைக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
இந்த மலைக்கோவிலக்கு கடந்தாண்டு ரோப்கார் வசதி ஏற்படுத்தப்பட்டது. சோளிங்கரில் இருந்து 14 கி.மீ., தொலைவில் உள்ள பாணாவரத்தில், சோளிங்கர் ரயில் நிலையம் உள்ளது. சென்னையில் இருந்து அரக்கோணம் வழியாக காட்பாடி செல்லும் மார்க்கத்தில், இந்த ரயில் நிலையம் உள்ளது.
இந்நிலையில், பாணாவரத்தில் இருந்து சோளிங்கருக்கு போதுமான பேருந்து வசதி இல்லை. ஷேர் ஆட்டோக்களே அதிகளவில் இயக்கப்படுகின்றன.
எனவே, பாணாவரத்தில் உள்ள சோளிங்கர் ரயில் நிலையத்தில் இருந்து, சோளிங்கர் ரோப்கார் வளாகம் வரை ‛மலையடி -- ரயிலடி' நகர பேருந்து சேவையை துவக்க வேண்டும் என, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.