/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
இருளர் குடியிருப்புக்கு தெரு விளக்கு அமையுமா?
/
இருளர் குடியிருப்புக்கு தெரு விளக்கு அமையுமா?
ADDED : ஜன 06, 2025 03:26 AM

காஞ்சிபுரம்,:ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி தாலுகாவில், திருமால்பூர் ஊராட்சி உள்ளது. அங்காளம்மன் கோவில் குளக்கரை ஒட்டி, இருளர்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு உள்ளன.
இந்த தொகுப்பு வீடுகள் இருக்கும் தெருவில் மின் வழித்தடம் அமைக்காமல், ஒரேயொரு மின்கம்பம் மட்டுமே அமைக்கப்பட்டு, அதன் வாயிலாக ஒவ்வொரு தொகுப்பு வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது.
இதனால், இரவு நேரங்களில் இருளர் குடியிருப்புகளுக்கு தெரு விளக்கு போட முடியவில்லை. மேலும், பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், அப்பகுதியினர் அச்சத்தில் உள்ளனர்.
எனவே, திருமால்பூர் இருளர் குடியிருப்புகளுக்கு தனி மின் வழித்தடம் அமைத்து, தெரு விளக்கு மற்றும் தனித்தனி குடியிருப்புகளுக்கு மின்சாரம் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என, இருளர் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.