/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மரங்களை அகற்றும் பணி தொடக்கம் பிரட்ஸ் - முள்ளுவாடி சாலை மூடல்
/
மரங்களை அகற்றும் பணி தொடக்கம் பிரட்ஸ் - முள்ளுவாடி சாலை மூடல்
மரங்களை அகற்றும் பணி தொடக்கம் பிரட்ஸ் - முள்ளுவாடி சாலை மூடல்
மரங்களை அகற்றும் பணி தொடக்கம் பிரட்ஸ் - முள்ளுவாடி சாலை மூடல்
ADDED : ஜன 24, 2025 01:33 AM
சேலம்: முள்ளுவாடி கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணிக்கு, மரங்களை வெட்டி அகற்றும் பணி தொடங்கப்பட்டதால், பிரட்ஸ் சாலையில் இருந்து வரும் முள்ளுவாடி கேட் சாலை, 'பேரிகார்டு' வைத்து மூடப்பட்டுள்ளது.
சேலம் - விருதாசலம் ரயில் தடத்தில் தினமும், 8 பயணியர் ரயில், பல சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த தடத்தில் ரயில் வரும்போது, முள்ளுவாடி கேட், 1, 2, அணைமேடு, தில்லை நகர், பொன்னம்மாபேட்டை உள்ளிட்ட கேட்டுகள் மூடப்படும். அப்போது, அந்தந்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதில் அணைமேடு, முள்ளுவாடி கேட் 1 பகுதிகளில் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்த நிலையில், தற்போது, 2வது கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதற்கு மாநகராட்சி தொங்கும் பூங்கா முதல் பிரட்ஸ் ரோடு கால்நடை மருத்துவமனை வரை, நிலம் எடுக்கப்பட்டு, கட்டடங்கள் இடிக்கப்பட்டு வருகின்றன. 22 கோடி ரூபாய் மதிப்பில், 620 மீ., நீளம், 11 மீ., அகலத்தில், மேம்பாலம் கட்டும் பணி, அடுத்த மாதம் தொடங்க உள்ளது.
இதனால் அப்பகுதியில் உள்ள, 37 மரங்களை வெட்டி அகற்றும் பணி, நேற்று முன்தினம் தொடங்கியது. 50 ஆண்டுகளுக்கு மேலான மரங்கள், வெட்டி அகற்றப்படுகின்றன. இதற்கு பிரட்ஸ் சாலையில் இருந்து வரும், முள்ளுவாடி கேட் சாலை நேற்று, 'பேரிகார்டு' வைத்து மூடப்பட்டது. வாகனங்கள், முள்ளுவாடி மேம்பாலத்தை பயன்படுத்த, நெடுஞ்சாலைத்துறையினர்
கேட்டுக்கொண்டுள்ளனர்.

