/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சாலையில் இரும்பு பொருட்களால் ஆக்கிரமிப்பு வாகன ஓட்டிகள், பாதசாரிகள் தினமும் அவதி

ADDED : ஜன 24, 2025 01:33 AM
சேலம், : சேலம் மாநகராட்சி, 27வது வார்டு, பெரியார் மேம்பாலம் அடிப்பகுதி யில் தொடங்கி, சத்திரம் மேம்பாலம் வரை, சீத்தாராமன் செட்டி தெரு எனும் பிரதான சாலை உள்ளது. அதில் லீபஜார், சத்திரம், செவ்வாய்ப்பேட்டை செல்லும் சரக்கு வாகனங்கள், லாரிகள் சென்று வருகின்றன. தமிழக அரசின் கிடங்குகளும் உள்ளன. அச்சாலை, சீர்மிகு நகர திட்டத்தில், பல கோடி ரூபாய் மதிப்பில், 'ஸ்மார்ட்' சாலையாக மாற்றப்பட்டது. சாக்கடை கால்வாய், நடைபாதை அமைத்து கான்கிரீட் சாலை போடப்பட்டது.
அச்சாலையோரம், 5க்கும் மேற்பட்ட பழைய இரும்பு விற்பனை கடை கள் உள்ளன. அந்த கடைக்காரர்கள், வாங்கி, விற்கும் பழைய இரும்பு சாமான்கள், பைப்புகள் உள்ளிட்டவற்றை, சாலை, நடை
பாதைகளை ஆக்கிரமித்து வைத்துள்ளனர். இதனால் அடிக்கடி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகின்றனர். பாதிசாரிகள், சாலையில்தான் நடந்து செல்கின்றனர். மேலும் இரும்பு ஆணிகள், சிறு இரும்பு துண்டுகளால், வாகனங்களும் பஞ்சராகி அவதிக்குள்ளாகின்றனர். அதனால் ஆக்கிரமிப்பை அகற்ற, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள், பாதசாரிகள் வலியுறுத்தினர்.