/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பசு மாடுக்கு வளைகாப்பு விழா நடத்தி ஆதின மடத்துக்கு அனுப்பிய தம்பதியர்

ADDED : ஜன 29, 2025 01:11 AM
பசு மாடுக்கு வளைகாப்பு விழா நடத்தி ஆதின மடத்துக்கு அனுப்பிய தம்பதியர்
இளம்பிள்ளை,: நாட்டு பசு மாடுக்கு வளைகாப்பு விழா நடத்திய தறித்தொழிலாளி, அந்த மாட்டை, திருவாவடுதுறை ஆதின மடத்துக்கு அனுப்பி வைத்தார்.
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே ரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் ராஜ்குமார், 55. இவரது மனைவி கண்ணம்மாள், 48. தறித்தொழிலாளியான தம்பதியர், 'மீனாட்சி' பெயரில் நாட்டு பசு மாட்டை வளர்த்தனர். இந்த மாடு, முதலாவதாக ஒரு கன்று ஈன்று, 7 மாத குட்டியாக உள்ளது.
இந்நிலையில் மீனாட்சிக்கு, 5 மாதங்களுக்கு முன் செயற்கை முறை கருவூட்டல் ஊசி போட்டதை தொடர்ந்து, மீண்டும் கருத்தரித்தது.
திருவாவடுதுறை ஆதினம் மீது பக்தி கொண்ட தம்பதியர், இந்த நாட்டு பசு மாட்டை ஆதினத்தில் ஒப்படைக்க முடிவு செய்தனர். அதற்கு முன்னதாக, நேற்று முன்தினம் அக்கம் பக்கத்தினர், சிவனடியார்களை அழைத்து, கருவுற்ற பெண்களுக்கு நடத்துவதை போன்று, மீனாட்சி மாட்டுக்கு வளைகாப்பு விழாவை
நடத்தினர்.அதில் பசுவை குளிப்பாட்டி, மஞ்சள், சந்தனம், குங்குமம் உள்ளிட்ட பொருட்களால் நலுங்கு வைத்து, மாட்டின் கொம்புகளில் வண்ண கண்ணாடி வளையல்களை, சுமங்கலி பெண்கள் அணிவித்தனர். தொடர்ந்து சிறப்பு பூஜை செய்து, ஆதின மடத்துக்கு அனுப்பினர். இந்நிகழ்ச்சி, அப்பகுதி மக்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.