/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'பங்க்' அருகே லாரியில் தீயால் 'திக் திக்' கடைகளை அடைத்து வியாபாரிகள் ஓட்டம்

ADDED : பிப் 02, 2025 01:38 AM
'பங்க்' அருகே லாரியில் தீயால் 'திக் திக்' கடைகளை அடைத்து வியாபாரிகள் ஓட்டம்
பனமரத்துப்பட்டி : பனமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வழியே நேற்று மாலை, 5:00 மணிக்கு, 10 சக்கரங்கள் கொண்ட கனரக டிப்பர் லாரி சென்றுகொண்டிருந்தது. அதன் டிரைவர், லாரியில் இருந்து டீசல் கொட்டியதை கவனிக்காமல் ஓட்டிச்சென்றார். அங்குள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது, லாரியின் முன்புறம் தீப்பற்றியது. சாலையில் லாரியை நிறுத்திவிட்டு, டிரைவர் இறங்கி ஓடினார். மின்மாற்றி, பெட்ரோல் பங்க் அருகே, லாரி எரிந்ததால், அச்சம் ஏற்பட்டது. சாலையோரம் இருந்த கடைகளை மூடி, வியாபாரிகள் ஓட்டம் பிடித்தனர். லாரி முன்புறம் முழுதும் தீ பரவி, கொழுந்து விட்டு எரிந்தது. வெப்பத்தால் முன்புற கண்ணாடி, இரு டயர்கள் அடுத்தடுத்து வெடித்து சிதறின.
அடுத்து, டீசல் டேங்க் அருகே தீ பரவியது. டீசல் வெடித்தால் பெரும் சேதம் ஏற்படும் சூழல் நிலவியதால், பதற்றம் உருவானது. உடனே மின் வாரியத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மின்மாற்றி இயக்கம் நிறுத்தப்பட்டது.
தொடர்ந்து செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு வீரர்கள், மாவட்ட உதவி அலுவலர் சிவக்குமார் தலைமையில், இரு வாகனங்களில் வந்து, 40 நிமிடம் போராடி, தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அரியலுாரை சேர்ந்த, லாரி டிரைவர் ஞானம், 45 என்பவரிடம், பனமரத்துப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். இச்சம்பவத்தால், சேலம் -கம்மாளப்பட்டி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.