/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வீட்டில் குழந்தை பாலினம் கண்டறிந்து கருக்கலைப்புஸ்கேன் இயந்திரம், மாத்திரை பறிமுதல்; 2 பேர் கைது
/
வீட்டில் குழந்தை பாலினம் கண்டறிந்து கருக்கலைப்புஸ்கேன் இயந்திரம், மாத்திரை பறிமுதல்; 2 பேர் கைது
வீட்டில் குழந்தை பாலினம் கண்டறிந்து கருக்கலைப்புஸ்கேன் இயந்திரம், மாத்திரை பறிமுதல்; 2 பேர் கைது
வீட்டில் குழந்தை பாலினம் கண்டறிந்து கருக்கலைப்புஸ்கேன் இயந்திரம், மாத்திரை பறிமுதல்; 2 பேர் கைது
ADDED : ஜன 22, 2025 01:16 AM
ஆத்துார்,:வீட்டில், கர்ப்பிணிக்கு கருவில் உள்ள பாலினத்தை கண்டறிந்து, கருக்கலைப்பில் ஈடுபட்டு வந்த இருவரை, சுகாதாரத்துறையினர் பிடித்து கொடுக்க, போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் சாந்தி தலைமையில், 10 பேர் அடங்கிய மருத்துவ குழுவினர், கள்ளக்குறிச்சியில் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது பாலினம் கண்டறிந்து, கருக்கலைப்பு செய்து வந்த, ரஞ்சித்குமார் என்பவரை கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலப்படி, சேலம் மாவட்டம் ஆத்துாரில் உள்ள ஒரு வீட்டில், 'ஸ்கேன்' இயந்திரம் மூலம் பரிசோதனை செய்து, கருக்கலைப்பு செய்வது தெரிந்தது.
இதனால் இணை இயக்குனர் சாந்தி, ஆத்துார் அரசு மருத்துவமனை, தலைமை மருத்துவ அலுவலர் ஜெயலட்சுமி உள்ளிட்ட குழுவினர், நேற்று இரவு, 9:00 மணிக்கு, ஆத்துார், புது பஸ் ஸ்டாண்ட் அருகே, சீதா கேசவன் தெருவை சேர்ந்த மேரி வீட்டில் வாடகைக்கு வசிக்கும் சத்யா, 40, வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது, 4 மாத கர்ப்பிணிக்கு, ஸ்கேன் இயந்திரம் மூலம் பாலின பரிசோதனை செய்தது தெரிந்தது.
பரிசோதனையில், அக்கிசெட்டிபாளையத்தை சேர்ந்த, பிளஸ் 2 படித்த சவுந்தரராஜன், 40, ஈடுபட்டார். இதற்கு புரோக்கராக, 10ம் வகுப்பு படித்த, ஆத்துார், கோட்டை வெங்கட்ராமன், 45, செயல்பட்டது தெரிந்தது. இந்த இருவரையும், மருத்துவ குழுவினர் பிடித்தனர். அவர்களிடம், ஸ்கேன் இயந்திரம், உபகரணங்கள், கருக்கலைப்புக்கு தேவையான மருந்து, மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். மேலும் சாந்தி புகார்படி, சவுந்தரராஜன், வெங்கட்ராமனை, ஆத்துார் டவுன் போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து சாந்தி கூறியதாவது: கள்ளக்குறிச்சி, ஆத்துாரில் சோதனை செய்தபோது, 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம், 40 பாக்கெட் கருக்கலைப்பு மாத்திரை, மருந்துகளை பறிமுதல் செய்துள்ளோம். ஆத்துாரில் உள்ள வீட்டில், கர்ப்பிணியை வரவழைத்து, பாலினம் கண்டறிந்துள்ளனர். இதற்கு அப்பெண்ணிடம், 12,000 ரூபாய் பெற்றுள்ளனர்.
கைது செய்யப்பட்ட, 2 பேர், தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்த சத்யா உதவியுடன், இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். பெண் குழந்தைகளை அழிக்கும் நோக்கில் செயல்படுவோர் மீது நடவடிக்கை எடுக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் கண்
காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
*******************