/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கடன் செலுத்தியும் நகையை தரவில்லைகிராம வங்கி மீது பெண் புகார்
/
கடன் செலுத்தியும் நகையை தரவில்லைகிராம வங்கி மீது பெண் புகார்
கடன் செலுத்தியும் நகையை தரவில்லைகிராம வங்கி மீது பெண் புகார்
கடன் செலுத்தியும் நகையை தரவில்லைகிராம வங்கி மீது பெண் புகார்
ADDED : பிப் 02, 2025 01:38 AM
கடன் செலுத்தியும் நகையை தரவில்லைகிராம வங்கி மீது பெண் புகார்
சேலம், : சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம், வ.உ.சி., நகர், 8வது வார்டை சேர்ந்த ரமேஷ் மனைவி சங்கீதா, 38. இவர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனு:
எங்கள் பகுதியில் செயல்படும், தெய்வ மகள் களஞ்சியம் மகளிர் சுய உதவிக்குழுவில் உறுப்பினராக உள்ளேன். அங்குள்ள தமிழ்நாடு கிராம வங்கி கிளையில், 2019ல், குழு சார்பில், 5 லட்சம் ரூபாய் கடன் பெற்று, அதில் என் பங்களிப்பான, 30,000 ரூபாயை, வங்கியில் திருப்பி செலுத்திவிட்டேன். எனினும் நான் அடகு வைத்த, 10 பவுன் நகையை திருப்பி தராமல், வங்கி நிர்வாகம், 3 ஆண்டுக்கு மேலாக போக்கு காட்டுகிறது. இதுகுறித்து கேட்டால், குழு சார்பில் வாங்கிய கடனை முழுமையாக அடைத்தால் மட்டுமே, நகையை திருப்பி தருவோம் என கூறுகின்றனர். உறுப்பினர்கள் சிலர், கடனை திருப்பி செலுத்தாததற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும். குழுவுக்கும், அடகு வைத்த நகைக்கும், எந்த தொடர்பும் இல்லை. ஆனாலும் நகையை ஒப்படைக்க வங்கி நிர்வாகம் மறுத்து வருவதால், மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, அடகு நகையை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
இதுகுறித்து வங்கி மேலாளர் ரவி கூறுகையில், ''குழு கடனாக வழங்கப்பட்டதால், கடன் பெற்ற ஒட்டு மொத்த உறுப்பினர்களும் அதற்கு முழு பொறுப்பு. அதனால் வங்கி விதிமுறை, நீதிமன்ற உத்தரவுப்படி நகையை தர வாய்ப்பில்லை,'' என்றார்.