/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பைக் மீது அரசு பஸ் மோதல்தலை நசுங்கி விவசாயி சாவு
/
பைக் மீது அரசு பஸ் மோதல்தலை நசுங்கி விவசாயி சாவு
ADDED : பிப் 14, 2025 01:30 AM
பைக் மீது அரசு பஸ் மோதல்தலை நசுங்கி விவசாயி சாவு
கெங்கவல்லி:கெங்கவல்லி அருகே கொண்டையம்பள்ளியை சேர்ந்த, விவசாயி ராஜேந்திரன், 60. நேற்று காலை, 8:15 மணிக்கு, 'பிளாட்டினா' பைக்கில் தம்மம்பட்டி சென்று, போலீஸ் ஸ்டேஷன் எதிரே உள்ள பூச்சி மருந்து கடையில், தோட்டத்துக்கு மருந்து வாங்கினார். பின் அவரது பைக்கில் அமர்ந்தபோது, தம்மம்பட்டியில் இருந்து துறையூர் வழியே கரூர் செல்லும் அரசு பஸ் வந்து, பைக் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி விழுந்த ராஜேந்திரன் தலை, பஸ் சக்கரத்தில் சிக்கி நசுங்கியது. படுகாயம் அடைந்த அவரை மக்கள் மீட்டு, தம்மம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். மேல்சிகிச்சைக்கு ஆத்துார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்தபோது, ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. தம்மம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.