/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரிக் வண்டி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்ஜி.எஸ்.டி.,க்குள் டீசலை கொண்டு வர கோரிக்கை

ADDED : மார் 01, 2025 01:42 AM
ரிக் வண்டி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்ஜி.எஸ்.டி.,க்குள் டீசலை கொண்டு வர கோரிக்கை
பனமரத்துப்பட்டி:ரிக் வண்டி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், ஜி.எஸ்.டி., வரம்புக்குள் டீசலை கொண்டு வர கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம் - நாமக்கல் நெடுஞ்சாலை, பனமரத்துப்பட்டி பிரிவு அருகே, ரிக் வண்டிகளை நிறுத்தி வைத்து, அதன் உரிமையாளர்கள், கடந்த, 25 முதல், வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், சேலம் ரிக் உரிமையாளர்கள், ஏஜன்ட்கள் ஆலோசனை கூட்டம், நேற்று
நடந்தது.இதுகுறித்து சேலம் மாவட்ட ரிக் வண்டி உரிமையாளர் சங்கத்தலைவர் சேது கூறியதாவது:
சேலம் மாவட்டத்தில், 500 ரிக் வண்டிகள் உள்ளன. டீசல், உதிரி பாக விலை உயர்ந்து வருவதால், தொழில் நலிவடைந்து வருகிறது. இயற்கையால் சில நேரங்களில் தொழில் செய்ய முடியவில்லை. இதனால், 12 மாதங்களும் தவணை செலுத்த முடியவில்லை. இதனால் துளையிடும் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளோம். டீசல் விலையில் இருந்து ஒரு அடிக்கு, 10 ரூபாய் விலை ஏற்ற முடிவு செய்தோம். ஏஜன்ட்கள் திடீரென உயர்த்த வேண்டாம் என்றனர்.
அதனால் மார்ச் 1(இன்று) முதல், 15 வரை, ஒரு அடிக்கு, 95 ரூபாய், அதற்கு பின், ஒரு அடிக்கு, 105 ரூபாய் என உயர்த்தப்படும். எங்கள் வருமானத்தில், 86 சதவீதம் டீசலுக்கு செலவிடுகிறோம். ஜி.எஸ்.டி., வரம்புக்குள் டீசலை கொண்டு வந்தால், ரிக் தொழில் நன்றாக இருக்கும். நாங்களும் கட்டணத்தை குறைத்து விடுவோம். மேலும் கர்நாடகாவில் ஒரு லிட்டர் டீசல், 88 ரூபாய், தமிழகத்தில், 93 ரூபாய். மாநில அரசு தமிழக மக்களுக்கு லிட்டருக்கு, 5 ரூபாய் உதவி செய்யலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.திருச்செங்கோடு ரிக் உரிமையாளர் சங்கத்தலைவர் சுரேஷ், சேலம் மாவட்ட செயலர் பாஸ்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.