ADDED : ஆக 01, 2025 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம் நகரில், 8 திசைகளில் உள்ள மாரியம்மன் கோவில்களில் ஆடி திருவிழாவின் பூச்சாட்டுதல், கம்பம் நடுதல், பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள், ஒரே நாளில் நடத்தப்படும். ஆனால் அம்மாபேட்டை பலப்பட்டரை மாரியம்மன் கோவிலில் கடந்த பிப்., 10, செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் கோவிலில் கடந்த ஏப்ரலில் பாலாலயம் செய்து கும்பாபிேஷக திருப்பணி நடந்து வருகிறது.
இதனால் இரு கோவில்களிலும், ஆடி திருவிழா நடப்பாண்டு ரத்து செய்யப்பட்டுள்ளதாக, அக்கோவில் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் வழக்கமான தினசரி பூஜை நடக்கும்.