/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸில்சர்வதேச மகளிர் தினம் கொண்டாட்டம்
/
விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸில்சர்வதேச மகளிர் தினம் கொண்டாட்டம்
விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸில்சர்வதேச மகளிர் தினம் கொண்டாட்டம்
விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸில்சர்வதேச மகளிர் தினம் கொண்டாட்டம்
ADDED : மார் 14, 2025 01:58 AM
விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸில்சர்வதேச மகளிர் தினம் கொண்டாட்டம்
சேலம்:சேலம் விநாயகா மிஷன் பல்கலையின், விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரி சார்பில், சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. முன்னதாக, கல்லுாரிக்கு வந்த பேராசிரியைகள், அலுவலக பெண் ஊழியர்களை, கல்லுாரி பேராசிரியர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து, துறை டீன் செந்தில்குமார் முன்னிலை வகித்து மகளிர் தின வாழ்த்து தெரிவித்தார். இத்தின கொண்டாட்டத்தை முன்னிட்டு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மேலும் கல்லுாரியில் பணிபுரியும் அனைத்து பேராசிரியைகள், அலுவலக பெண் ஊழியர்களை கவுரவிக்கும்படி, பேராசிரியர்கள், அலுவலக ஆண் ஊழியர்கள் மூலம் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாட்டை, துறை பேராசிரியர்கள், அலுவலக ஆண் ஊழியர்கள் செய்திருந்தனர்.