/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
முன்பதிவு செய்ய முடியாமல் ரயில் பயணியர் தவிப்புசோதனையில் தொய்வால் போலி ஏஜன்சிகள் ஆதிக்கம்
/
முன்பதிவு செய்ய முடியாமல் ரயில் பயணியர் தவிப்புசோதனையில் தொய்வால் போலி ஏஜன்சிகள் ஆதிக்கம்
முன்பதிவு செய்ய முடியாமல் ரயில் பயணியர் தவிப்புசோதனையில் தொய்வால் போலி ஏஜன்சிகள் ஆதிக்கம்
முன்பதிவு செய்ய முடியாமல் ரயில் பயணியர் தவிப்புசோதனையில் தொய்வால் போலி ஏஜன்சிகள் ஆதிக்கம்
ADDED : ஏப் 02, 2025 01:53 AM
முன்பதிவு செய்ய முடியாமல் ரயில் பயணியர் தவிப்புசோதனையில் தொய்வால் போலி ஏஜன்சிகள் ஆதிக்கம்
சேலம்:ரயில் டிக்கெட் முன்பதிவு, 60 நாட்களாக குறைக்கப்பட்ட நிலையில், சோதனையிலும் தொய்வு ஏற்பட்டதால், போலி ஏஜன்சிகளின் ஆதிக்கம் அதிகரித்து, ஏராளமான பயணியர், டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.
தமிழகத்தில் தினமும் பல நுாறு ரயில்களில், பல ஆயிரக்கணக்கான பயணியர் செல்கின்றனர். இரு மாதங்களுக்கு முன் வரை, பயணிப்பதற்கு, 120 நாட்கள் வரை முன்பதிவு செய்யும் முறை இருந்தது. தற்போது, 60 நாட்களுக்கு மட்டும் முன்பதிவு செய்ய முடியும்படி உள்ளது. இந்த மாற்றத்துக்கு பின், டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது, பயணியருக்கு சவாலாக
மாறியுள்ளது.அவரவர் இடங்களில் இருந்து, ஐ.ஆர்.சி.டி.சி., செயலி மூலம் பதிவு செய்ய முடியும் என்றாலும், முன்
பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் டிக்கெட் தீர்ந்துவிடுகிறது. கணினி முன்பதிவு மையங்களுக்கு, முன்கூட்டியே சென்று வரிசையில் நின்று முன்பதிவு செய்ய முற்பட்டாலும், பலருக்கும் டிக்கெட் கிடைப்பதில்லை. குறிப்பாக கோடை விடுமுறையான, ஏப்ரல், மே மாதங்களில், டிக்கெட்டுகளுக்கு கடும் கிராக்கி நிலவுகிறது.
இதுகுறித்து ரயில் பயணியர் கூறியதாவது:
முன்பு முக்கிய நாட்களுக்கு மட்டும் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் தீர்ந்துவிடும். தற்போது வார இறுதி நாட்கள் மட்டுமின்றி வார நாட்களில் கூட சில நிமிடங்களில் தீர்ந்துவிடுகிறது. 'பிரவுசிங் சென்டர்', போலி ஏஜன்சி நடத்தும் பலரும், முன்கூட்டியே பல்வேறு பெயர்களில் டிக்கெட்டுகளை, 'புக்' செய்து விடுகின்றனர். அதை கடைசி நேரத்தில் இரு மடங்கு விலைக்கு விற்றுவிடுகின்றனர்.
ரயில் சோதனையின்போது, முன்பு ஆதார் உள்ளிட்ட அடையாள ஆவணங்களை சோதித்தனர். சமீப காலமாக இச்சோதனை நடப்பதில்லை. அதிலும் கூட்டம் அதிகம் உள்ள நாட்களில், டிக்கெட் பரிசோதனை நடப்பதில்லை. இதனால் வேறு பெயர்களில் உள்ள டிக்கெட்டுகளில் பயணிக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதில் நல்ல வருமானம் என்பதால், ஏராளமானோர், இந்த மோசடியில் இறங்கியுள்ளனர்.
இவர்கள் முன்பதிவு செய்வதற்கென்றே சில சாப்ட்வேர்கள், சில யுக்திகளை பயன்படுத்துவதால், எளிதில் டிக்கெட் முன்பதிவு செய்துவிடுகின்றனர். இது தெரியாமல், பயணியர் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் தவிக்கின்றனர். வேறு பெயர்களில் டிக்கெட் வைத்துக்கொண்டு பயணிக்க முடியாத அளவுக்கு சோதனையை தீவிரப்படுத்தினாலே, இந்த மோசடியை தடுக்க முடியும். அதற்கு தெற்கு ரயில்வே உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.