sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 18, 2026 ,மாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சேலம் போலீஸ் கமிஷனர் தகவல் சிட்டி விஜிலென்ஸ் கமிட்டி துவக்க நடவடிக்கை

/

சேலம் போலீஸ் கமிஷனர் தகவல் சிட்டி விஜிலென்ஸ் கமிட்டி துவக்க நடவடிக்கை

சேலம் போலீஸ் கமிஷனர் தகவல் சிட்டி விஜிலென்ஸ் கமிட்டி துவக்க நடவடிக்கை

சேலம் போலீஸ் கமிஷனர் தகவல் சிட்டி விஜிலென்ஸ் கமிட்டி துவக்க நடவடிக்கை


ADDED : ஜூலை 12, 2011 01:24 AM

Google News

ADDED : ஜூலை 12, 2011 01:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம் : ''சேலம் மாநகரில் குற்றங்களை தடுக்கவும், குறைக்கவும் தன்னார்வ இளைஞர்களை கொண்டு, 'சிட்டி விஜிலென்ஸ் கமிட்டி' துவக்கப்படும்,'' என, சேலம் போலீஸ் கமிஷனராக, நேற்று பதவி ஏற்றுக் கொண்ட சொக்கலிங்கம் தெரிவித்தார்.

அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சேலம் மாநகரில் போக்குவரத்து நெரிசலை முழுமையாக குறைக்க, பொதுமக்களின் முழு ஒத்துழைப்பு தேவை. ரோட்டின் இரண்டு புறங்களிலும் வாகனங்களை நிறுத்துவதை தவிர்த்து, ரோடுகளை ஆக்கிரமித்துள்ள கடைகளை அகற்ற போலீஸார் மேற்கொள்ளும் முயற்சிக்கு, பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பொதுமக்களுக்கு இடையூறாக, சட்டம்- ஒழுங்கு பிரச்னைகளை ஏற்படுத்துபவர்கள் அடையாளம் காணப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு பொதுமக்கள் மட்டுமின்றி, ஊடகங்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். குற்றங்கள் அதிகமாக நடக்கும் பகுதி, அடிக்கடி வழிப்பறி நடக்கும் பகுதிகள் அடையாளம் காணப்பட்டு, கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு சட்ட விரோத செயல்கள் முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை மேற் கொள்ளப்படும். சேலம் மாநகரில் குற்றங்களை தடுக்கவும், அவற்றை குறைக்கவும், 'சிட்டி விஜிலென்ஸ் கமிட்டி' உருவாக்கப்படும். இந்த கமிட்டியில் குற்றப் பின்னணி இல்லாத தன்னார்வ இளைஞர்கள் சேர்க்கப்பட்டு, போலீஸாரின் ஒத்துழைப்புடன் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவர். பொதுமக்களுக்காக போலீஸ், போலீஸ் சார்பாக பொதுமக்கள் என்ற நிலை சேலத்தில் உருவாக்கப்படும். மாநகரில் ரவுடியிஸம், கட்டப்பஞ்சாயத்துக்கள் குறித்து, பொதுமக்கள் தாராளமாக என்னிடம் நேரில் புகார் அளித்தால், நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்ற சூழ்நிலைகளால் ஒரு பகுதியில், சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என, முன்கூட்டியே தெரிவித்தாலும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். புகார்களை, 805 602 5815 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டும் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக, சேலம் டி.ஐ.ஜி., வெங்கட்ராமன் புதிய போலீஸ் கமிஷனர் சொக்கலிங்கத்திடம் பொறுப்புகளை ஒப்படைத்தார். தொடர்ந்து, போலீஸ் துணை கமிஷனர் பாஸ்கரன், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், அலுவலக ஊழியர்கள் ஏராளமானோர் கமிஷனர் சொக்கலிங்கத்துக்கு வாழ்த்து தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us