தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 'கெங்கவல்லி மின்கோட்ட அலுவலகத்தை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை'

'கெங்கவல்லி மின்கோட்ட அலுவலகத்தை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை'

'கெங்கவல்லி மின்கோட்ட அலுவலகத்தை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை'


ADDED : ஏப் 04, 2024 04:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 04, 2024 04:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கெங்கவல்லி: கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுரு. இவர் நேற்று, சேலம் மாவட்டம் கெங்கவல்லி, ஆணையாம்பட்டி, 74.கிருஷ்ணாபுரம், கூடமலை உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று இரட்டை இலை சின்னத்துக்கு ஓட்டு சேகரித்தார்.

அப்போது சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் பேசியதாவது: கெங்கவல்லியை தலைமையிடமாக வைத்து புது மின்பகிர்மான கோட்டம் அமைக்கப்படும் என, 2022 ஜூலையில் தமிழக அரசு அறிவித்தது. இதில், 12 பிரிவு அலுவலகம், 3 துணை மின்நிலையம், 75,000 மின் இணைப்பு பெற்றுள்ளவர்கள் இடம்பெறுவர் என, தெரிவிக்கப்பட்டது. அதை, 2022 டிச., 15ல், முதல்வர் ஸ்டாலின், வீடியோ கான்பரன்சில் தொடங்கிவைத்தார். தொடர்ந்து அதற்கான விழா, கெங்கவல்லி மின்வாரிய அலுவலகத்தில் நடந்தது. ஆனால் இதுவரை கோட்ட மின்வாரிய அலுவலர் உள்ளிட்ட அலுவலர்களும் நியமிக்கப்படவில்லை; அதற்கான அலுவலகமும் எங்கே உள்ளது என தெரியவில்லை.

கலெக்டர்களிடம் தெரிவித்தும் இதுவரை மின்கோட்ட அலுவவலகத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. பள்ளி மாணவர்கள், பெண்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களுக்கும், முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, இ.பி.எஸ்., ஆகியோர் திட்டங்களை செயல்படுத்தினர். தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை நிறுத்திவிட்டனர். மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி வரும்போது அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படும். தி.மு.க.,வை, இத்தேர்தலில் அகற்றினால் தான் தமிழகத்துக்கு விடிவு கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

இதில் கெங்கவல்லி எம்.எல்.ஏ., நல்லதம்பி, ஒன்றிய செயலர் ராஜா, பேரூர் செயலர் இளவரசு, மாவட்ட அவைத்தலைவர் அர்ஜூனன், மாவட்ட கவுன்சிலர் இளங்கோவன், தே.மு.தி.க., புதிய தமிழகம் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us