sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

'கோவிந்தா' கோஷம் அதிர சொர்க்கவாசல் திறப்புபெருமாள் கோவில்களில் பக்தர்கள் தரிசனம்

/

'கோவிந்தா' கோஷம் அதிர சொர்க்கவாசல் திறப்புபெருமாள் கோவில்களில் பக்தர்கள் தரிசனம்

'கோவிந்தா' கோஷம் அதிர சொர்க்கவாசல் திறப்புபெருமாள் கோவில்களில் பக்தர்கள் தரிசனம்

'கோவிந்தா' கோஷம் அதிர சொர்க்கவாசல் திறப்புபெருமாள் கோவில்களில் பக்தர்கள் தரிசனம்


ADDED : ஜன 11, 2025 01:46 AM

Google News

ADDED : ஜன 11, 2025 01:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்,: சேலம், கோட்டை அழகிரிநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி வைபவ சொர்க்கவாசல் திறப்பு, நேற்று அதிகாலை நடந்தது. இதையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத அழகிரிநாத பெருமாளுக்கு, பால், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபி ேஷகம் செய்து, பட்டாடை உடுத்தி, தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு, பல்வேறு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது.

தொடர்ந்து ரத்ன கிரீடம் அணிந்து ராஜ அலங்காரத்தில் பெருமாள், தாயாருடன் உட்

பிரகாரத்தில் வலம் வந்தார். பின் வடக்கு புறம், 'பரமபதம்' எனும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, அதன் வழியே பல்லக்கில் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் வலம் வந்தார். அப்படியே கோவிலை சுற்றிவந்து பெருமாள், தாயாருக்கு, மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. பட்டாச்சாரியார், சிறப்பு பூஜை செய்த பின் மஹா தீபாராதனை காட்டப்பட்டது. இதற்கு நள்ளிரவு முதலே பக்தர்கள் குளிரையும் பொருட்படுத்தாமல், நீண்ட வரிசையில் வந்து காத்திருந்து, பெருமாளை தரிசனம் செய்தனர்.

இலவச தரிசனம் செய்ய வந்த பக்தர்கள், பழைய புத்தக கடை வீதி, ஹபீப் தெரு வழியே கோவிலில் தரிசனம் செய்தனர். ஆன்லைனில், 25 ரூபாய் கட்டணம் செலுத்திய பக்தர்கள், குண்டு போடும் தெரு, வெங்கடசாமி தெரு வழியே வந்து தரிசனம்

செய்தனர். மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு தலைமையில், 500க்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அதேபோல், 2ம் அக்ரஹாரம் லட்சுமி நாராயணர் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

சின்னக்கடை வேணுகோபால் சுவாமி, பட்டைக்கோவில் வரதராஜர், சிங்கமெத்தை சவுந்தரராஜர், சின்னதிருப்பதி வரதராஜர், செவ்வாய்ப்பேட்டை பாண்டுரங்கநாதர் வெங்கடாஜலபதி, நாமமலை வரதராஜர், நெத்திமேடு கரியபெருமாள் உள்பட சேலம் மாநகரில் உள்ள பல்வேறு பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு கோலாகலமாக நடந்தது.

திரளான பக்தர்கள், கோவிந்தா கோஷம் எழுப்பி தரிசனம் செய்தனர்.

காடையாம்பட்டி, காருவள்ளி சின்ன திருப்பதி வெங்கட்ரமணர் கோவிலில், சொர்க்கவாசலில் எழுந்தருளிய வெங்கட்ரமண சுவாமியை, 'கோவிந்தா' கோஷம் எழுப்பி, பக்தர்கள் தரிசனம் செய்தனர். 100 ரூபாய் விரைவு தரிசனம், 20 ரூபாய் தரிசனம், பொது தரிசனம் என்ற வகையில், திரளான பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர்.

ஓமலுார், கோட்டை விஜயராகவ பெருமாள், நங்கவள்ளி லட்சுமி நரசிம்மர், இடைப்பாடி மூக்கரை நரசிம்ம பெருமாள், சங்ககிரி, வி.என்.பாளையம் வஸந்த வல்லபராஜ பெருமாள், ஆத்துார், கோட்டை வெங்கடேச பெருமாள், நரசிங்கபுரம் ரங்கநாதர், ஆறகளூர் கரி

வரதராஜர், வீரகனுார் கஜவரதராஜர், தலைவாசல் வரதராஜர், வாழப்பாடி சந்தைப்பேட்டை சென்றாய பெருமாள் உள்ளிட்ட கோவில்களில், சொர்க்கவாசல் திறப்பு நடந்தது.

திருக்கல்யாணம்தாரமங்கலம், ஊர்சாவடி பஜனை பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவத்துக்கு, ஸ்ரீதேவி, பூதேவி, பெருமாள் சுவாமிக்கு பூக்களால் அலங்காரம் செய்தனர். தொடர்ந்து மக்கள், சீர்வரிசை தட்டுகளை எடுத்து வந்தனர். தொடர்ந்து யாகங்கள் செய்து, சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து திருவீதி உலா நடந்தது.






      Dinamalar
      Follow us