/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஹெல்மெட் அணிந்த வாகன ஓட்டிகளுக்கு ரோஜா கொடுத்து நீதிபதி விழிப்புணர்வு

ADDED : ஜன 22, 2025 01:17 AM
ஆத்துார்:ஆத்துார் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், சாலை பாதுகாப்பு மாத விழா, விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. ஆத்துார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கிய பேரணியை, ஆத்துார் சார்பு நீதிமன்ற நீதிபதி கணேசன் தொடங்கி
வைத்தார்.
அதில் ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள், சுற்றுலா வேன் சங்க டிரைவர்கள் உள்பட, 50க்கும் மேற்பட்டோர், மொபட், பைக், கார்களில் பங்கேற்றனர். பைக், மொபட்டில் சென்றவர்கள், ஹெல்மெட், கார் டிரைவர்கள் சீட் பெல்ட் அணிந்து, போக்குவரத்து விழிப்புணர்வு
வாசகங்களுடன், உடையார்பாளையம், பழைய பஸ் ஸ்டாண்ட், ராணிப்பேட்டை, கடைவீதி, புதுப்பேட்டை, கிரைன்பஜார், காமராஜர் சாலை வழியே சென்றனர்.
தொடர்ந்து புதுப்பேட்டை வழியே, பைக், மொபட்டில் ஹெல்மெட் அணிந்து சென்ற வாகன ஓட்டிகள், காரில் சீட் பெல்ட் அணிந்து சென்றவர்களுக்கு, நீதிபதி கணேசன், ரோஜா பூ கொடுத்து வாழ்த்து தெரிவித்து, போக்குவரத்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். பேரணி, அரசு ஆண்கள் மேல்
நிலைப்பள்ளியை அடைந்தது. வட்டார போக்குவரத்து அலுவலர் ரகுபதி, டி.எஸ்.பி., சதீஷ்குமார், மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வகுமார்
உள்ளிட்டோர் பங்கேற்றனர்.