/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பூத் வாரியாக நிர்வாகிகளுக்கு பொறுப்பு வழங்கல்சேலம் அ.தி.மு.க.,வில் சீரமைப்பு பணி விறுவிறு
/
பூத் வாரியாக நிர்வாகிகளுக்கு பொறுப்பு வழங்கல்சேலம் அ.தி.மு.க.,வில் சீரமைப்பு பணி விறுவிறு
பூத் வாரியாக நிர்வாகிகளுக்கு பொறுப்பு வழங்கல்சேலம் அ.தி.மு.க.,வில் சீரமைப்பு பணி விறுவிறு
பூத் வாரியாக நிர்வாகிகளுக்கு பொறுப்பு வழங்கல்சேலம் அ.தி.மு.க.,வில் சீரமைப்பு பணி விறுவிறு
ADDED : பிப் 21, 2025 01:17 AM
சேலம் ;சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி, அ.தி.மு.க.,வில், பூத்வாரியாக பொறுப்பு வழங்கப்பட்டு, சேலம் மாநகர நிர்வாகிகள் சீரமைப்பு பணி நடந்துள்ளது.
வரும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி பெற, கட்சியில் சீரமைப்பு பணி நடக்கிறது. அதன்படி சேலம் மாநகருக்கு, சீரமைப்பு பணி பொறுப்பாளராக, தர்மபுரி மாவட்டம் மொரப்பூரை சேர்ந்த, அமைப்பு செயலர் சிங்காரம் உள்ளார். இதன் எதிரொலியாக, நிர்வாகிகள் மாற்றப்பட்டு, புது நிர்வாகிகளுக்கு பொறுப்புகள் வழங்கப்படுகின்றன.
அதன்படி, மாநகர செயலர் வெங்கடாஜலம் மாற்றப்பட்டு, புது பொறுப்பாளர்களாக செல்வராஜ், பாலு நியமிக்கப்பட்டனர். மேலும் வாக்காளர்களை சரியான முறையில் கவனிக்க, 'பூத் கமிட்டி'யை பலப்படுத்த, நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இதுகுறித்து, மாநகர நிர்வாகிகள் கூறியதாவது: மாநகரில், 60 வார்டுகள் உள்ளன. ஒரு வார்டில், 20 பூத் இருந்தால் அதை பிரித்து, 4 அல்லது 5 பூத்கள் அடங்கிய ஒரு வார்டாக மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, 73 வார்டுகள் அதிகரித்து, தற்போது, 133 வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன.
மேலும் ஒரு வார்டில் வார்டு செயலர் உள்பட, 9 பதவிகள்; எம்.ஜி.ஆர்., மன்றம், ஜெ., பேரவைக்கு தலா, 9; மகளிர், மாணவர் அணிக்கு தலா, 7; இளைஞர் அணி, இளைஞர் பாசறைக்கு தலா, 7; தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு, 7 என, 62 பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. ஒரு வார்டுக்கு, 62 நிர்வாகிகள் மூலம், 133 வார்டுகளுக்கு, 8,246 நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், 8 பகுதியாக செயல்பட்டதை, 7 பகுதிகள் அதிகரித்து, 15 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு பகுதிக்கு, 44 என, 660 நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதில் மாவட்ட அளவில் உள்ள பேரவை, இளைஞர் அணி, இளைஞர் பாசறை, மாணவர், தகவல்தொழில் நுட்ப பிரிவுக்கு, 25 முதல், 40 வயது வரை உள்ளவர்களுக்கு மட்டும் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. வயது அதிகமாக உள்ளவர்களுக்கு, மாநில பொறுப்புகள் வழங்கப்பட்டன. மாநகரில், 800 பூத்கள் உள்ளன.ஒரு பூத்துக்கு, 6 ஆண், 3 பெண் என, 9 பேருக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, 7,200 பேருக்கு பொறுப்புகள் வழங்கப்படுகின்றன. இதற்கு முன் இதுபோன்ற பொறுப்புகள் கட்சியில் வழங்கப்படவில்லை.
முக்கியமாக கட்சியில் உறுப்பினராக இருக்க வேண்டும்; அனைத்து பூத்தில் உள்ளவர்களுக்கும் பொறுப்பு; ஒரே பூத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் பொறுப்பு வழங்கக்கூடாது; ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் பொறுப்பு; ஒருவருக்கு ஒரு பொறுப்பு மட்டும் என, பூத் நிர்வாகிகள் பெயர் பட்டியல் சரிபார்த்து நியமிக்கும் பணி, 500 பூத்கள் வரை முடிந்துள்ளது. மீதி பணி, விரைவில் முடியும்.
பின், 2 மாதங்களுக்கு ஒருமுறை பயிற்சி அளிக்கப்படும். இவர்கள் தேர்தல் பணியில் முக்கிய பங்காற்றுவர். அனைத்து பூத்தில் உள்ளவர்களுக்கும் பொறுப்பு வழங்கினால் தான் ஓட்டு கேட்டு செல்ல எளிதாக இருக்கும் என்பதற்கேற்ப பொறுப்பாளர் நியமிக்கப்படுகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.