/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இயற்கை விவசாயிகளுக்கு பயிற்சி அளித்துமுழு மானியத்தில் விதை வழங்க கோரிக்கை

ADDED : மார் 01, 2025 01:44 AM
இயற்கை விவசாயிகளுக்கு பயிற்சி அளித்துமுழு மானியத்தில் விதை வழங்க கோரிக்கை
சேலம்:சேலம் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. அதில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் பேசியதாவது:
மரவள்ளி கிழங்குக்கு உடனே விலை நிர்ணயிக்க வேண்டும். கோடைகாலம் தொடங்கியதால் கால்நடைகளுக்கு மானிய விலையில் தீவனம் கிடைக்க செய்ய வேண்டும். சில உரக்
கடைகளில் நிர்ணயித்த விலையை விட, அதிக விலைக்கு விற்கப்படுகிறது. அதிகாரிகள் ஆய்வு செய்து, விலைப்பட்டியலை பார்வைக்கு வைக்க அறிவுறுத்த வேண்டும். நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். இயற்கை விவசாயி
களுக்கு பயிற்சி அளித்து, 100 சதவீத மானியத்தில் விதை வழங்க வேண்டும். மணிவிழுந்தான், லத்துவாடி பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் வேண்டும்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.தொடர்ந்து கலெக்டர் பிருந்தாதேவி பேசியதாவது:கோடைகாலத்தில் விவசாயிகள், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி, அதிக லாபம் பெற சொட்டுநீர் பாசன திட்டம், தோட்டக்கலை, மலைப்பயிர்கள் துறை மூலம் செயல்படுத்தப்படுகிறது. சிறு, குறு விவசாயிகளுக்கு, 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு, 75 சதவீத மானியத்திலும் சொட்டுநீர் பாசனம் அமைத்து கொடுக்கப்படுகிறது. இதனால் பயிருக்கு தேவையான நீர், உரம் போன்றவை, பயிரின் வேருக்கு அருகே கிடைப்பதால் வளர்ச்சி, மகசூல் அதிகளவில் கிடைக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.அங்கு, தென்னையை தாக்கும் வாடல் நோய், தென்னையை ஓலை மஞ்சள் நிறமடைதல் உள்ளிட்ட நோய் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்து, கருத்து காட்சி அமைக்கப்பட்டு, உரிய விளக்கம் அளிக்கப்பட்டது. டி.ஆர்.ஓ., ரவிக்குமார், வேளாண் இணை இயக்குனர் சிங்காரம், கூட்டுறவு சங்க இணை பதிவாளர் ராஜ்குமார் உள்பட பலர்
பங்கேற்றனர்.