/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தேர்தல் ராசி இல்லாதவர் இ.பி.எஸ்.,தி.மு.க., - மாவட்ட செயலர் பேச்சு தேர்தல் ராசி இல்லாதவர் இ.பி.எஸ்.,தி.மு.க., - மாவட்ட செயலர் பேச்சு

ADDED : மார் 23, 2025 01:03 AM
தேர்தல் ராசி இல்லாதவர் இ.பி.எஸ்.,தி.மு.க., - மாவட்ட செயலர் பேச்சு
ஆத்துார்:சேலம் மாவட்டம் ஆத்துார், நரசிங்கபுரம் நகரம், ஆத்துார் ஒன்றியம், கீரிப்பட்டி பேரூர் தி.மு.க., பாக முகவர் ஆலோசனை கூட்டம், ஆத்துார் நகராட்சி அண்ணா கலையரங்கில் நேற்று நடந்தது. அதில் சேலம் கிழக்கு மாவட்ட செயலர் சிவலிங்கம் தலைமை வகித்து பேசியதாவது:
வரும், 2026ல், 200 தொகுதிகளிலும், தி.மு.க., வெற்றி பெறவேண்டும் என, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அவர் தலைவராக பொறுப்பேற்றது முதல், சட்டசபை, உள்ளாட்சி, லோக்சபா, இடைத்தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார். 'ராசி'யானவராக ஸ்டாலின் உள்ளதால், 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவார்.
ஆனால், அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., கட்சி தலைமைக்கு வந்தது முதல், அனைத்து தேர்தல்களிலும் தோல்வி தான் பெற்றுள்ளார். தேர்தலுக்கும், இ.பி.எஸ்.,க்கும் ராசியே இல்லை. இ.பி.எஸ்., அக்கட்சி மாவட்ட செயலர் இளங்கோவன், எந்த படையை திரட்டி வந்தாலும், தி.மு.க.,விடம் வெற்றி பெற முடியாது. பாக முகவர்கள், கட்சி தலைமை ஆலோசனைப்படி, தேர்தல் பணி மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாவட்ட துணை செயலர்கள் சுரேஷ்குமார், சின்னதுரை, நகர, ஒன்றிய நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.