/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பெரியார் பல்கலையில் 'பசுமை வனம்' மாவட்ட வன அலுவலர் துவக்கி வைப்பு
/
பெரியார் பல்கலையில் 'பசுமை வனம்' மாவட்ட வன அலுவலர் துவக்கி வைப்பு
பெரியார் பல்கலையில் 'பசுமை வனம்' மாவட்ட வன அலுவலர் துவக்கி வைப்பு
பெரியார் பல்கலையில் 'பசுமை வனம்' மாவட்ட வன அலுவலர் துவக்கி வைப்பு
ADDED : ஜூலை 23, 2025 02:30 AM
ஓமலுார், சேலம் பெரியார் பல்கலை, மாவட்ட வனத்துறை இணைந்து, பல்கலை வளாகத்தில், 4.5 ஏக்கரில், 500 மரக்கன்றுகளை நட்டு, 'பெரியார் பசுமை வனம்' உருவாக்கும் பணி நேற்று நடந்தது.
பல்கலை நிர்வாக குழு உறுப்பினர்கள் சுப்ரமணி, ஜெயந்தி தலைமை வகித்தனர். மாவட்ட வன அலுவலர் காஷ்யப் சஷாங்க் ரவி, மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார். தொடர்ந்து பேராசிரியர்கள், மாணவ, மாணவியர், அலுவலக பணியாளர்கள், தொழிலாளர்கள், ஆங்காங்கே மரக்கன்றுகளை நட்டனர். பல்கலை பதிவாளர்(பொ) ராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.
இதுகுறித்து, காஷ்யப் சஷாங்க் ரவி அளித்த பேட்டி: இந்த முயற்சி, 10 ஆண்டுக்கு பின், தேசிய நெடுஞ்சாலையில் செல்வோர், இப்பகுதியை காணும்போது இயற்கை சூழ்ந்த பகுதியாக காணப்படும். இதேபோல் பல்துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் பணியை துரிதப்படுத்த வேண்டும்.நகர்புற பகுதிகளில் பசுமை வனம் போன்ற மரக்கன்றுகளை நட, வனத்துறை உரிய உதவிகளை மேற்கொள்ளும். இதன்மூலம் நகர்பகுதியில் வெப்பமாதல் ஓரளவு குறையக்கூடிய சூழல் ஏற்படும். கடந்த ஓராண்டில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள், வனத்துறை சார்பில் நடப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.