/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மஹேந்ரா சர்வதேச பள்ளியில் ஆண்டு விழா கொண்டாட்டம்
/
மஹேந்ரா சர்வதேச பள்ளியில் ஆண்டு விழா கொண்டாட்டம்
ADDED : ஜன 15, 2025 12:59 AM
மஹேந்ரா சர்வதேச பள்ளியில்ஆண்டு விழா கொண்டாட்டம்
மல்லசமுத்திரம்,: நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் மஹேந்ரா சர்வதேச பள்ளியில், கடந்த, 11ல், 12வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. நகைச்சுவை நடிகர் குரேஷி, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பள்ளி செயலாளர் வள்ளியம்மாள், குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார். பள்ளியின் முதன்மை முதல்வர் சம்பத்குமார் வரவேற்றார். தாளாளர் பரத்குமார் தலைமை வகித்து பேசினார். பள்ளி முதல்வர் ஜெயக்குமார் ஆண்டறிக்கை வாசித்தார்.
இதையடுத்து, காலை, 10:30 மணிக்கு மழலையர் வகுப்பு முதல், 4ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கும்; மாலை, 3:00 மணிக்கு, 5 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கும் ஆண்டு விழா நடந்தது. இதில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு, சிறப்பு விருந்தினர் குரேஷி, சான்றிதழ், பதக்கம் வழங்கி பாராட்டினார். தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடந்தன.