/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாநாடு நடத்தி வெற்றி காணகாங்., கட்சியினருக்கு அறிவுரை
/
மாநாடு நடத்தி வெற்றி காணகாங்., கட்சியினருக்கு அறிவுரை
மாநாடு நடத்தி வெற்றி காணகாங்., கட்சியினருக்கு அறிவுரை
மாநாடு நடத்தி வெற்றி காணகாங்., கட்சியினருக்கு அறிவுரை
ADDED : ஜன 29, 2025 01:09 AM
மாநாடு நடத்தி வெற்றி காணகாங்., கட்சியினருக்கு அறிவுரை
சேலம்,: காங்., கட்சியின், சேலம் மாநகர் அலுவலகத்தில், மேற்கு, தெற்கு, வடக்கு சட்டசபை தொகுதி ஓட்டுச்சாவடிகளின் கட்டமைப்பை பலப்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம், நேற்று நடந்தது. மாநகர் தலைவர் பாஸ்கர் தலைமை வகித்தார்.
அதில், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மண்டல ஒருங்கிணைப்பாளர் அருள் பெத்தையா பேசியதாவது:காங்., இதுவரை தேர்தலை மையமாக கொண்டு செயல்பட்டது. இனி, அமைப்பு ரீதியாக கட்டமைப்பை பலப்படுத்த, தலைமை முடிவெடுத்துள்ளது. தற்போது தமிழகத்தில் காங்., 77 மாவட்டமாக கட்டமைக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு மாவட்டத்தை தேர்வு செய்து, அரசியல் மாநாடு நடத்தி வெற்றி காண வேண்டும். அப்போது தான் கூட்டணி கட்சியினர், நம்மை திரும்பி பார்ப்பர். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து மாவட்ட, மாநகர், ஒன்றியம், பேரூர், கிளை, வார்டு அளவில் ஓட்டுச்சாவடியை விரிவுபடுத்தி சீரமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதற்கான விண்ணப்ப படிவங்கள், கட்சியினருக்கு வழங்கப்பட்டன.
சேலம் எம்.பி., தொகுதி பொறுப்பாளர் செல்வராஜ், சேலம் தெற்கு தொகுதி அமைப்பாளர் ராஜகணபதி, தெற்கு தொகுதி கோபிகுமார், வடக்கு தொகுதி திருமுருகன் உள்பட பலர்
பங்கேற்றனர்.