/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு வாகனம் குறித்து விசாரணை
/
விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு வாகனம் குறித்து விசாரணை
விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு வாகனம் குறித்து விசாரணை
விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு வாகனம் குறித்து விசாரணை
ADDED : ஜன 29, 2025 01:16 AM
விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு வாகனம் குறித்து விசாரணை
பனமரத்துப்பட்டி : நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே பெரியமணலியை சேர்ந்த கூலித்தொழிலாளி கணேசன், 67. இவரது மனைவி ஜோதி, 60. இவர்களுக்கு, 3 மகள்கள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து, டி.வி.எஸ்., மொபட்டில், தம்பதி சேலம் நோக்கி புறப்பட்டனர். கணேசன் ஓட்டினார்.
இரவு, 10:30 மணிக்கு, மல்லுாரில், சேலம் - நாமக்கல் நெடுஞ்சாலையில் சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம், மொபட் பின்புறம் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் காயமடைந்த கணேசன், ஜோதி, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நேற்று காலை ஜோதி உயிரிழந்தார். விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து, மல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.