/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஐ.ஐ.எச்.டி., கல்லுாரிகள் இடையே தேசிய தடகள போட்டி தொடக்கம்
/
ஐ.ஐ.எச்.டி., கல்லுாரிகள் இடையே தேசிய தடகள போட்டி தொடக்கம்
ஐ.ஐ.எச்.டி., கல்லுாரிகள் இடையே தேசிய தடகள போட்டி தொடக்கம்
ஐ.ஐ.எச்.டி., கல்லுாரிகள் இடையே தேசிய தடகள போட்டி தொடக்கம்
ADDED : பிப் 06, 2025 01:22 AM
ஐ.ஐ.எச்.டி., கல்லுாரிகள் இடையே தேசிய தடகள போட்டி தொடக்கம்
சேலம்: ஐ.ஐ.எச்.டி., கல்லுாரிகள் இடையே, 2வது தேசிய தடகள போட்டி, சேலம் இந்திய கைத்தறி தொழில்நுட்ப கல்லுாரியில் நேற்று தொடங்கியது. வரும், 8 வரை, இப்போட்டி நடக்கிறது. இதில் மத்திய அளவில், மேற்கு வங்கம், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், அசாம், ஒடிசா, சேலம்; மாநில அளவில், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, சத்தீஸ்கர் ஆகிய கல்லுாரிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் பங்கேற்றனர். கைப்பந்து, கோ - கோ, கிரிக்கெட், தடகள போட்டிகள் நடத்தப்பட்டன. வரும், 8ல் பரிசு வழங்கப்படும். முன்னதாக அம்மாபேட்டை இன்ஸ்பெக்டர் பால்ராஜ் தொடங்கி வைத்தார். சேலம் கல்லுாரி இயக்குனர் தென்னரசு, முதுநிலை பேராசிரியர் பிரபாகரன், இளநிலை பேராசிரியர்கள் லோகேஷ், தர்மேந்தர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.