/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இயற்கை வேளாண் பொருள் விற்பனைக்குசான்றிதழ் பெறும் நடைமுறை விழிப்புணர்வு

ADDED : பிப் 14, 2025 01:29 AM
இயற்கை வேளாண் பொருள் விற்பனைக்குசான்றிதழ் பெறும் நடைமுறை விழிப்புணர்வு
பனமரத்துப்பட்டி:பனமரத்துப்பட்டியில், 'அட்மா' திட்டத்தில், இயற்கை முறையில் உற்பத்தி செய்த வேளாண் பொருட்களை விற்பதற்கான சான்றிதழ் பெறும் நடைமுறை குறித்து, மாவட்ட அளவில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு பயிற்சி நேற்று நடந்தது. 'அட்மா' திட்ட குழு தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். தி.மு.க.,வின், சேலம் கிழக்கு மாவட்ட துணை செயலர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார்.
பனமரத்துப்பட்டி வேளாண் உதவி இயக்குனர் சாகுல் அமீத், இயற்கை முறை பயிர் சாகுபடி தொழில்நுட்பம் குறித்தும், வேளாண் உதவி அலுவலர் ஹரிகிருஷ்ணன்(விற்பனை), இயற்கை வேளாண் பொருட்கள் விற்பனைக்கு சான்றிதழ் பெறும் வழிமுறைகள், நேரடி விற்பனை குறித்தும் விளக்கினார்.இயற்கை உயிர் உரங்களை பயன்படுத்தி விதை நேர்த்தி செய்தல் குறித்து, அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுமித்ரா, செயல் விளக்கம் அளித்தார். இதன்மூலம், 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்தனர். தொடர்ந்து, பனமரத்துப்பட்டி வேளாண் விரிவாக்க மையத்தில் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை (அட்மா) குழு உறுப்பினர் கூட்டம் நடந்தது. அதில் அட்மா குழு தலைவராக
சந்திரசேகரன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.