ADDED : பிப் 22, 2025 01:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பைக் - லாரி மோதி கொத்தனார் பலி
வாழப்பாடி:வாழப்பாடி, விலாரிபாளையத்தை சேர்ந்த கொத்தனார் பிரகாஷ், 32. இவர், நேற்று முன்தினம் இரவு, 9:30 மணிக்கு, அவரது, 9 வயது மகள், 7 வயது மகனுடன், 'ஸ்டார் சிட்டி' பைக்கில் வீடு நோக்கி சென்றுகொண்டிருந்தார்.
சோமம்பட்டி பெரியாண்டிச்சி கோவில் அருகே,
தம்மம்பட்டி நெடுஞ்சாலையில் சென்றபோது, எதிரே வந்த லாரி, பைக் மீது மோதியது. பைக்கில் சென்ற, 3 பேரும் காயமடைந்தனர். மக்கள் மீட்டு, வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு பிரகாஷ் உயிரிழந்தார். அவரது மகன், மகளுக்கு முதலுதவி அளித்து, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். வாழப்பாடி போலீசார் விசாரணையில், பிரகாஷ் ஹெல்மெட் அணியாமல் ஓட்டிச்சென்றது தெரிந்தது. தொடர்ந்து
விசாரிக்கின்றனர்.