/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அதிக வாடகை தருவதாககார்களை வாங்கிஅடகு வைத்தவர் கைது
/
அதிக வாடகை தருவதாககார்களை வாங்கிஅடகு வைத்தவர் கைது
அதிக வாடகை தருவதாககார்களை வாங்கிஅடகு வைத்தவர் கைது
அதிக வாடகை தருவதாககார்களை வாங்கிஅடகு வைத்தவர் கைது
ADDED : பிப் 23, 2025 01:30 AM
அதிக வாடகை தருவதாககார்களை வாங்கிஅடகு வைத்தவர் கைது
சேலம் :சேலம், களரம்பட்டி பிரதான சாலை, அண்ணா வாத்தியார் தெருவை சேர்ந்தவர் சிவசக்தி, 44. மீன் கடை வைத்து வியாபாரம் செய்கிறார். இவரது நண்பர், அஸ்தம்பட்டி, மணக்காட்டை சேர்ந்த சுந்தர்ராஜன், 35.
இவர் சிவசக்தியிடம், 'காரை வாடகைக்கு கொடுத்தால் கூடுதல் பணம் கிடைக்கும்' என கூறியுள்ளார். இதனால் சிவசக்தி, அவரது நண்பர்களிடம், 4 கார்களை வாங்கி வாடகைக்கு கொடுத்தார்.
ஆனால் அவர் கூறியது போல் வாடகை கொடுக்காமல் ஏமாற்றினார். அதிர்ச்சி அடைந்த சிவசக்தி, 'வாடகை கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. கார்களை திருப்பி கொடு' என கேட்டுள்ளார். அதையும் அவர் கொடுக்கவில்லை. இதுகுறித்து சிவசக்தி புகார்படி, கிச்சிப்பாளையம் போலீசார் விசாரித்தபோது, 4 கார்களையும் அடகு வைத்தது தெரிந்தது. பின், காரை மீட்ட போலீசார், அவரை கைது செய்தனர்.