/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாணவி கூட்டு பாலியல் விவகாரம்ஹெச்.எம்., கள்ளக்குறிச்சிக்கு மாற்றம்
/
மாணவி கூட்டு பாலியல் விவகாரம்ஹெச்.எம்., கள்ளக்குறிச்சிக்கு மாற்றம்
மாணவி கூட்டு பாலியல் விவகாரம்ஹெச்.எம்., கள்ளக்குறிச்சிக்கு மாற்றம்
மாணவி கூட்டு பாலியல் விவகாரம்ஹெச்.எம்., கள்ளக்குறிச்சிக்கு மாற்றம்
ADDED : பிப் 23, 2025 01:32 AM
மாணவி கூட்டு பாலியல் விவகாரம்ஹெச்.எம்., கள்ளக்குறிச்சிக்கு மாற்றம்
ஆத்துார்:பள்ளி மாணவியை, 3 மாணவர்கள் கூட்டு பாலியல் செய்த விவகாரத்தில், தலைமை ஆசிரியர், கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு பள்ளிக்கு இடமாற்றப்பட்டார்.
சேலம் மாவட்டம் ஆத்துார் அருகே உள்ள அரசு பள்ளியில், 7ம் வகுப்பு படிக்கும், 14 வயது மாணவியை, அதே பள்ளியில் பிளஸ் 1 படிக்கும், 16 வயதுடைய, 3 மாணவர்கள், கூட்டாக சேர்ந்து பாலியல் தொந்தரவு செய்தனர். இதில், 3 மாணவர்களும் கைது செய்யப்பட்டு, கூர் நோக்கு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இத்தகவலை மறைத்ததாக, தலைமை ஆசிரியர் உள்பட, 3 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், நீதிமன்றத்தில் ஜாமின் பெற்றனர்.
ஆனால், தலைமை ஆசிரியர் முத்துராமன், ஆசிரியர் ராஜேந்திரன், ஆசிரியை பானுப்பிரியா மீது துறை நடவடிக்கை எடுக்க, பள்ளி கல்வித்துறை இயக்குனரகத்துக்கு, சேலம் முதன்மை கல்வி அலுவலர் கபீர் பரிந்துரைத்தார். இதனால் முத்துராமனை, கள்ளக்குறிச்சி மாவட்டம் நைனார்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு, இடமாற்றம் செய்து, நேற்று முன்தினம், பள்ளி கல்வி இயக்குனரகம்
உத்தரவிட்டது. இதுகுறித்து கபீர் கூறுகையில், ''தலைமை ஆசிரியர் இடமாற்றப்பட்டார். இரு ஆசிரியர்கள் மீதான நடவடிக்கை தகவலை, பள்ளி கல்வித்துறை அறிவிக்கும்,'' என்றார்.