/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாவட்ட எல்லையில் குழப்பம்தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்குமா?
/
மாவட்ட எல்லையில் குழப்பம்தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்குமா?
மாவட்ட எல்லையில் குழப்பம்தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்குமா?
மாவட்ட எல்லையில் குழப்பம்தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்குமா?
ADDED : மார் 03, 2025 01:57 AM
மாவட்ட எல்லையில் குழப்பம்தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்குமா?
பனமரத்துப்பட்டி:சேலம் - நாமக்கல் மாவட்ட எல்லையில், மல்லுார் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. சமீபத்தில் அங்குள்ள ஆசிரியர், மாணவியரிடம் தவறாக நடப்பதாக புகார் எழுந்தது. இதுகுறித்து கொண்டலாம்பட்டி மகளிர் போலீசாருக்கு புகார் சென்றது. ஆனால் பள்ளி, நாமக்கல் மாவட்ட எல்லையில் உள்ளதால் வெண்ணந்துார் போலீசார், ராசிபுரம் மகளிர் போலீசார், கொண்டலாம்பட்டி மகளிர் போலீசார் ஆகியோரில் யார் விசாரிப்பது என்ற குழப்பம் நிலவியது. இது நாமக்கல் மாவட்டம் தான் என, வருவாய்த்துறையினர் உறுதிப்படுத்தினர். ஆனால் கொண்டலாம்பட்டி போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுத்தனர்.
இதுகுறித்து சேலம் தாலுகா வருவாய்த்துறையினர் கூறுகையில், 'மல்லுார் பள்ளி கல்வி நிர்வாகம் சேலம் மாவட்டத்தில் உள்ளது. வருவாய்த்துறை நிர்வாகம், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகாவில் உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் மல்லுார் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது' என்றனர்.
சேலம் ஊரக போலீசார் கூறுகையில், 'பள்ளி, நாமக்கல் மாவட்டம் வெண்ணந்துார் போலீஸ் ஸ்டேஷன் எல்லையில் உள்ளது. அந்த போலீசார் கண்டுகொள்வதில்லை. இதனால் மல்லுார் போலீசார், சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க, அப்பகுதிக்கு சென்று வருகின்றனர்' என்றனர்.
இச்சம்பவத்தால், சேலம் - நாமக்கல் மாவட்ட எல்லையில் குழப்பம் ஏற்பட்டு, அரசு அதிகாரிகள் சுதந்திரமாக செயல்பட முடியாத நிலை உள்ளது. அதனால், இதுபோன்ற குழப்பத்தை முடிவுக்கு கொண்டு வர, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தினர்.