/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மண்டல மாநாடு நடத்த முடிவு
/
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மண்டல மாநாடு நடத்த முடிவு
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மண்டல மாநாடு நடத்த முடிவு
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மண்டல மாநாடு நடத்த முடிவு
ADDED : மார் 06, 2025 01:30 AM
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தமண்டல மாநாடு நடத்த முடிவு
சேலம்:சேலத்தில், மத்திய தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது. சி.ஐ.டி.யு., மாநில துணைத்
தலைவர் தியாகராஜன் தலைமை வகித்தார். அதில் தொழிலாளர்களுக்கு எதிரான, 4 சட்ட தொகுப்பை திரும்ப பெறுதல்; விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை அமல்படுத்தல்; விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தல் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும், 14ல், சேலம், கோட்டை மைதானத்தில் உள்ள கருணாநிதி மண்டபத்தில் மண்டல மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டது.
ஏ.ஐ.டி.யு.சி., தேசியக்குழு உறுப்பினர் முனுசாமி, எச்.எம்.எஸ்., மாநில துணைத்தலைவர் கணேசன், தொ.மு.ச., மாவட்ட கவுன்சில் செயலர் பழனிசாமி, சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் உதயகுமார், செயலர் கோவிந்தன் உள்பட பலர் பங்கேற்றனர்.