/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குசாலை அமைத்த எஸ்.ஆர்.சி., நிறுவனம்
/
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குசாலை அமைத்த எஸ்.ஆர்.சி., நிறுவனம்
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குசாலை அமைத்த எஸ்.ஆர்.சி., நிறுவனம்
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குசாலை அமைத்த எஸ்.ஆர்.சி., நிறுவனம்
ADDED : மார் 06, 2025 01:51 AM
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குசாலை அமைத்த எஸ்.ஆர்.சி., நிறுவனம்
பனமரத்துப்பட்டி:-பனமரத்துப்பட்டியில், மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், சேலம் எஸ்.ஆர்.சி., நிறுவனம், சி.எஸ்.ஆர்., டிரஸ்ட் சார்பில், 14.32 லட்சம் ரூபாய் மதிப்பில், நுழைவாயில் முதல் பிரசவ வார்டு, புதிய புறநோயாளிகள் பிரிவு சுற்றி, பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டது. நேற்று, அச்சாலை பெயர் பலகையை, எஸ்.ஆர்.சி., நிறுவன இயக்குனர் விமலன் திறந்து வைத்தார்.
அதேபோல் வர்ஷா ப்ளு மெட்டல் சார்பில், பூங்கா பகுதியில், 2 லட்சம் ரூபாய் மதிப்பில், குழந்தைகள் விளையாடும் ஊஞ்சல், கர்ப்பிணியர் அமர, இரு கிரானைட் இருக்கைகள் அமைக்கப்பட்டன. அதை, வர்ஷா ப்ளு மெட்டல் உரிமையாளர் சுரேஷ்குமார் திறந்து வைத்தார். தொடர்ந்து இரு நிறுவனங்களுக்கு, ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. பனமரத்துப்பட்டி வட்டார மருத்துவ அலுவலர் மகிதா, மருத்துவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.