/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
துப்பாக்கி குண்டால் மருத்துவர்கள் அதிர்ச்சிவிலங்கு என நண்பரை சுட்டவர் கைது

ADDED : மார் 16, 2025 02:18 AM
துப்பாக்கி குண்டால் மருத்துவர்கள் அதிர்ச்சிவிலங்கு என நண்பரை சுட்டவர் கைது
பெத்தநாயக்கன்பாளையம்:மரத்திலிருந்து விழுந்ததாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் உடலில் துப்பாக்கி குண்டு இருந்ததால், மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பெத்தநாயக்கன்பாளையம், கரியகோவில் அருகே, கீழ்நாடு ஊராட்சியை சேர்ந்தவர் சோபிராஜ், 33. கடந்த, 6 இரவு, 11:30 மணிக்கு, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில், மரத்தில் இருந்து தவறி விழுந்ததாக கூறி சேர்ந்தார். நேற்று அறுவை சிகிச்சை செய்தபோது, துப்பாக்கியின் பால்ரஸ் குண்டு இருப்பதை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்து, கரியகோவில் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதுகுறித்து விசாரித்த பின், போலீசார் கூறியதாவது: சோபிராஜ், அவரது நண்பர்கள் முருகேசன், செல்வம், அண்ணாமலை ஆகியோர், அதே பகுதி
யில் இரவில், முருகேசனுக்கு சொந்தமான உரிமமற்ற நாட்டு துப்பாக்கியுடன் வனவிலங்கு வேட்டைக்கு சென்றனர். இருட்டில் விலங்கு என நினைத்து சோபிராஜை, முருகேசன் சுட்டுள்ளார். முருகேசனை கைது செய்து, நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.